skip to main |
skip to sidebar
பீனிக்ஸ் என்பது செவ்வாய் கோள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு ஆள் இல்லாத விண்கலம்.செவ்வாய் பற்றிய ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இதில் உள்ளன.இதனுடைய நோக்கம் என்னவெனில் அங்கு உயிரினங்கள் எதாவது வாழ முடியுமா?அங்குள்ள நீரின் தன்மை,மண்ணின் தன்மை இவற்றை அறியவே.
இந்த விண்கலமானது நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைகழகத்தின் மூலம் ஆகஸ்ட் 4,2007 ம் வருடம் அனுப்பப்பட்டது.இது "புளோரிடா" மாகாணத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.இது ஐக்கிய அமெரிக்கா,கனடா,சுவிட்சர்லாந்து,மற்றும் ஜெர்மனி பல்கலைகழகங்களின் கூட்டு முயற்சி ஆகும்.செவ்வாயில் உறைபனி அதிகம் உள்ள இடத்திலிருந்து மண்ணைத்தோண்டி அதனை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பும்.கடைசியாக கிடைத்த தகவலின்படி செவ்வாயில் பனிக்கட்டி இருப்பது உறுதியாயிருக்கிறது.இதன் எடை 350 கி.கி,பூமியிலிருந்து செவ்வாயில் இறங்க எடித்துக்கொள்ளும் காலம் 92.46 நாட்கள்.
1 comments:
kadavule inruthaan intha aavi ulakam en kanil paddathu
anpudan
rahini
germany
Post a Comment