Saturday, June 7, 2008

என் அறிவியல் ஆசிரியருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள திரு.அற்புதராஜ் ஐயா அவர்களுக்கு

நான் தங்களிடம் ஏழாம் வகுப்பு பயின்றேன்.தங்களுடைய அறிவியல் பாட வகுப்பில் ஒரு முறை தாங்கள் ஒரு 1/2 குயர் நோட்டு வரைபடத்திற்காக போடச்சொன்னீர்கள்.ஆனால் நான் ஒரு குயர் நோட்டு போட்டு அன்றைக்கு இரவு முழுதும் கண் விழித்து வரைந்து அடுத்த நாள் தங்களிடம் நீட்ட நீங்களோ என் முகத்தில் விட்டெறிந்தீர்கள்.அப்புறம் சில பல உதைகள்.ஏன் என்று தெரியவில்லை.ஓரு வேளை எனது தந்தையும் அதே பள்ளியில் வேலை பார்த்த‌தாலோ என்னவோ உங்க அப்பா இருக்குறாருங்குற திமிரானு கேட்டு அடிச்சிங்க.இறுத்தேர்வு முடியும் வரை என்னிடம் பாடம் சம்மந்தமாக எந்த கேள்விகளையும் கேட்கவில்லை.காலப்போக்கில் நான் ஒவ்வொரு வகுப்பாக மாறும்போதும் எப்பொழுது உங்களை பார்த்தாலும் வணக்கம் செலுத்துவேன்.ஆனால் தாங்கள் ஒரு சிறு புன்னகையை கூட விட்டு சென்றதில்லை.இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்களை தெப்பக்குள வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது சந்திக்க நேர்தது."சரி இன்னைக்காவது சார் சிரிப்பாரு"என்ற என் அர்ப்ப ஆசையயும் பொய்யாக்கிவிட்டு சென்றீர்கள் என் வணக்கத்திற்கு பின்.

தொடரும் சார் என் வணக்கம்.

நன்றி.


தங்களின் கீழ்படிந்த மாணவன்
ரூபன்.L


2 comments:

சிவசுப்பிரமணியன் said...

அப்படி அந்த வாத்தியாருக்கு வணக்கம் சொல்லாட்டிதான் என்ன?

இளங்குமரன் said...

மனத்தில் சின்னதாக ஒரு வலி. அந்த ஆசிரியரின் முகவரி தொலைபேசி எண் இருந்தால் கொடுங்கள். அவர் மனத்தில் அப்படி என்னதான் வைத்திருக்கின்றார் என்று தெரிந்து கொள்வோம். நான் சிங்கையிலிருந்து தமிழகம் வரும்போது நான் என்னுடைய மாணவர்களை அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று பார்த்து வருவேன். கடந்த ஆண்டு தமிழகம் வந்த பொழுது கேரளாவில் இருந்த என்னுடைய மாணவி ஒருவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று கேரளா சென்று அவரையும் அவர் கணவரையும் பார்த்துவிட்டு வந்தேன். பெருமைக்காகச் சொல்லவில்லை என் மாணவர்களை நான் மிகவும் நேசிக்கின்றேன்.