Monday, March 31, 2008

ராஜாங்கம்!

வேற யாருங்க நம்ம இளையராஜா சார பத்திதான் பேசபோறோம்.எல்லோருக்கும் தெரிந்த இசை மேதைங்க.அவரை பற்றி ஒரு சில தெரியாத விவரங்கள பத்தி கொஞ்சம் பார்ப்போம்.இவர் பிறந்த ஊர் மதுரைக்கு பக்கத்துல "பன்னபுரம்"ங்குற இடம்.இவரோட குரு பாவலர் வரதராஜன்.ரொம்ப சின்ன வயசுலயே இசை மேல அதீத வெறியரா இருந்துருக்கார்.1969 ல தாங்க மெட்ராஸ்(இப்ப சென்னை) வந்துருக்கார்.அப்புறம் "தன்ராஜ்"என்ற ஆசிரியரிடம் பியானோவும்,கிட்டாரும் மேற்கத்திய இசையயும் கற்றார்.

இசை நுட்ப அறிவுக்காக லண்டன் சென்று ட்ரினிடி பல்கலைகழகத்துல சேர்ந்து அதனை முழுதாக கற்றுத் தேர்ந்தார்முதல் படமான " அன்னக்கிளி " 1976 ல வெளி வந்து சக்க போடு போட்டுருக்குங்க.இதுல விசேஷம் என்னனா? முதன் முதலா ஒரு இசையமைப்பாளருக்கு விளம்பரபலகை வைத்த பெருமை இவரையே சாரும்.இந்த படத்துல இன்னொரு சுவாரசியம் என்னனா இவரு தன்னோட முதல் கம்போஸிங்க(அதாங்க இசை கோர்ப்பு) ஆரம்பிக்கிறப்பவே பவர் கட்.எல்லாரும் நினைச்சாங்க எங்க இவன் தேறப் போறான்னு.அன்னக்கி அவர் இத ஒரு தடங்கல்னு நினைச்சுருந்தா???????

அப்புறம் வரிசையா பதினாறு வயதினிலே,பொண்ணு ஊருக்கு புதுசு,கண்ணன் ஒரு கைக்குழந்தை, நெற்றிக்கண், நிழல்கள்,மூடுபனி,ஆறிலிருந்து அறுபதுவரை, நெஞ்சத்தை கிள்ளாதே, கோழிக்கூவுது,இப்படினு சொல்லிட்டே போகலாம். நானூறாவது படமா " நாயகன்",ஐநூறாவது படமா " அஞ்சலி" அமைந்தது. திரை இசைய தவிர " ஆல்பமும்" பன்னிருக்காரு. இத தவிர கர்நாடக சங்கீதத்துல " பஞ்சமுகி" எனும் ராகத்தினை கண்டுபிடிச்சுருக்கார். இசைத்துறைல நுழைந்து 20 வருடத்துல 500 படங்கள தாண்டிட்டார்.

பட்டி தொட்டியெல்லாம் இவரோட இசை சென்றடைய காரணம் மனதை வருடும் மெல்லிசையும், நாட்டுப்புற இசைய்யும் தான். சமீபத்துல கூட வந்த " திருவாசகம் " பற்றி நான் சொல்லிதான் தெரியனுமா? இந்த காலத்துலதான் இசைக்கோர்ப்பு வேலைகள் எல்லாம் ரொம்ப சுலபமா பண்றாங்க.இன்னும் தெளிவா சொன்னா தனித்தனி ட்ராக் காக முடிச்சிடறாங்க.அந்த காலத்துல அப்படி கிடயாது."இளைய நிலா பொழிகிறதே"ங்குற பாடல 17 முறை எடுத்துருக்கார்."காதலுக்கு மரியாதை" படத்தின் அத்தனை பாடல்களும் ஒரே நாள் ல முடிக்கப்பட்டது.

நடிகர் ராமராஜன்னு ஒருத்தர் இருந்தார் இல்லையா? அவருடைய படங்கள் எல்லாம் ஓடியதற்கு நம்ம ராஜா சார் தான் காரணம். நடிகர் மைக் மோகன் தொடர்ந்து 25 வெள்ளி விழா படங்கள கொடுத்துருக்கார்னா அதுக்கும் நம்மதான் காரணம்.இன்னும் நிறைய சொல்லலாம்."பூவே செம்பூவே","கன்ணே கலைமானே","என் வானிலே" இதெல்லாம் கேட்டுட்டு அழாம இருக்க முடியுமா? வாழ்க ராஜா! தொடரட்டும் அவரின் இசை பயணம்.

Thursday, March 27, 2008

நட்பா? காதலா?

என்னங்க தலைப்பே சுவாரசியமாய் இருக்குனு பார்க்குரீங்களா? கண்டிப்பா! இல்லையா பின்ன?மனிதனா பிறந்த ஒவ்வொருவரும் மேலே சொன்ன இரண்டயும் கலந்து வராம இருக்க முடியாது. நான் சின்ன வயசா இருக்கும்போது சொன்ன மாதிரி "பிரபு" வ தவிர வேர யாரும் இல்ல.ஆறாவது படிக்கும்போது எனக்கு "மணிவேல்"னு ஒரு நண்பன் வந்தான்.ஏனோ தெரியல ஒரு வருடம் மட்டுமே நெருக்கமான தோழனா இருந்தான்.ஏழாவதுல தான் "வினோத்,ஜெப்ரி வந்தானுங்க,இப்ப நினைக்கிறப்ப கூட கண்களில் கண்ணீர் வரும்,இவர்களுடன் நான் பெற்ற நட்பு.அந்த அளவுக்கு ஆனந்தமானது.முழு பரீட்சை விடுமுறைல கூட லெட்டர் போட்டுக்குவோம்.( நண்பா இன்னும் அந்த மடல்கள் எல்லாம் பத்திரமா வச்சுருக்கேன்டா).பத்தாவதுல அவன் வேறு ஒரு பள்ளிக்கு போய்ட்டான்.பதினோறாம் வகுப்புல சிவராம் ரொம்ப நல்ல நண்பன்.இப்ப தன்னோட முதுகலை படிப்ப சென்னைல படிக்கிறான்.வினோத் ம் அங்கதான் இருக்கான்.ஜெப்ரி மலேசியாவில் இருக்கிறான்.

எங்க வீட்டு அருகே சின்ன பிள்ளை யா இருக்கும்போதே இருக்குற நண்பர்களை பத்தி சொல்லவே இல்ல பாருங்க."கார்த்தி","முத்துகுமார்".இவங்கள பத்தி சொல்லனும்.கார்த்தி நான் எல்லாம் அப்பைல இருந்தே ஒண்ணாதான் விளையாடுவோம்.அப்ப எனக்கு முத்துவ தெரியாது.இனிமேதான் கூத்தே இருக்கு.ஒரே கல்லூரிலதான் படிச்சோம்.அப்பதான் முத்துவ அறிமுகபடுத்தி வச்சான் கார்த்தி.அப்புறம் நாங்க மூணு பேரும் தான் படத்துக்கு போவோம்.கால ஓட்டத்துல கார்த்திய விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் எல்லா இடத்துக்கும் சுத்த ஆரம்பிச்சுட்டோம்.இப்ப வரைக்கும் நாங்க மூணு பேரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.மலைக்கோட்டைக்கு வாய் இருந்தா கூட அழுவும்.அந்த அளவுக்கு அங்க போய்ருக்கோம்.



கல்லூரில இருக்குற நண்பர்கள் பத்தி சொல்லனும்னா நிறைய பேர் இருக்காங்களே? எல்லா துறையிலயும் ஆண்,பெண் நண்பர்கள் இருந்தாங்க. நான் ஏன் அப்படி சொல்றேன்னா ஒரு சிலர் தான் இப்ப வரைக்கும் இருக்காங்க. நெருக்கமான தோழனாக ரூபஸ் இருக்குறான்.செந்தமிழ் இன்னொரு தோழியா இருக்குறா.அப்புறம் கலைஞர்,தியாகு,ராவ்,விஜி,கார்த்தி,லால்குடி கார்த்தி,பிரவின்.மற்ற துறைல ராஜா,மாம்ஸ்,கேத்தன்.......இன்னும் நிறைய பேர் இருக்காங்க.இதுல ரூபஸ் இப்ப திருவனந்தபுரத்துல ஒரு தனியார் நிறுவனுத்துல பொறியாளரா இருக்கான்,செந்து சென்னைல ஒரு கல்லூரில விரிவுரையாளரா இருக்கா,முத்துகுமார் சென்னைல ஒரு பன்னாட்டு நிறுவனத்துல இருக்கான்.எங்களுடைய நட்பு அனைவரும் உயிருடன் இருக்கும் வரை தொடரும்.

என்னடா நட்ப பத்தியே சொல்லிட்டுருக்கானே காதல பத்தி சொல்லவே இல்லனு நீங்க கேக்குறது புரியுது.இவ்வளவு ஆழமான அருமையான நண்பர்களை பற்றியும் , நட்ப பற்றியும் நினைக்கிறப்ப கிடைக்கின்ற ஆனந்தம் காதல பத்தி எழுதினா கிடைக்காதுனு எனக்கு தோனுது.அதனால தலைப்ப மாத்தாம அதனை பற்றிய பகிர்தலை விடுப்போம்.வரட்டுமா????

Tuesday, March 25, 2008

திருச்சிய பத்தி கொஞ்சம் பார்ப்போமா?









திருச்சி ரொம்ப பெரிய ஊர் இல்லைனாலும் கொஞ்சம் பெரிய ஊர் தான்.சிறப்பான சில இடங்கள்னு பார்த்தா புனித லூர்து அன்னை ஆலயம்,மலைக்கோட்டைஇவற்றை ஒட்டிய ஒரு தர்கா,அப்புறம் வெளில வந்து பாத்தா பாரத மிகு மின் நிலையம், முக்கொம்பு, கல்லணை, மலைக்கோவில், துப்பாக்கி தொழிற்சாலை. இந்த சிறப்பான இடத்துல ஒரு மத நல்லிணக்கமும் ஒளிஞ்சிருக்கு.அது என்ன தெரியுமா? பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரே நேரத்தில் மலைக்கோட்டை,லூர்தன்னை ஆலயம்,தர்கா மூன்றிலும் மணி ஒலிக்கும்.இப்ப சொல்லுங்க திருச்சி சிறப்பா இல்லையா?

சுற்றுலா தலம் கூட இருக்குங்க:

திருச்சில இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் இருக்கு.ஒன்னு "சத்திரம் பேருந்து நிலையம்".இன்னொன்று " மத்திய பேருந்து நிலையம் ".இதுல முதலாவதா "முக்கொம்பு" பத்தி பார்ப்பொம்.சத்திரத்திலிருந்து ஒரு 15 கி.மீ.தொலைவில் இருக்குது இந்த இடம்.ஒரு காலத்துல பள்ளிகள் ல சுற்றுலா கூட்டிட்டு வருவாங்க.இப்ப காதலர்கள் பூங்கா ஆனது கொஞ்சம் உறுத்தலான உண்மை.அடுத்தது கல்லணை.இதுவும் முக்கொம்புவை ஒட்டிய ஒரு தலமாகும்.கரிகால மன்னர் இதனை கட்டினார் என்ற வரலாற்று செய்தியும் உண்டு.புளியஞ்சோலைனு ஒரு இடம் இருக்குங்க.இது திருச்சில இருந்து சுமார் 50 கி.மீ.தொலைவுல இருக்கு.

பார்க்க வேண்டிய இடங்கள்:

மேற்கண்ட கோயில்கள் எல்லாமே பார்க்க வேண்டிய இடங்கள் தான்.இது தவிர பூண்டி மாதா பேராலயம், திருவரங்கம், மலைக்கோவில், தெப்பக்குளம் இன்னும் நிறைய இருக்கு.


கல்லூரிகள்:

திருச்சில முக்கியமான கல்லூரி யாக " புனித வளனார் தன்னாட்சி "கல்லூரிய சொல்லலாம்.ஏன்னா?திரு.மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரி இது.இவர் தன்னுடைய இளங்கலையை இங்குதான் பயின்றார்(இயற்பியல்).இது மட்டும் அல்ல மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இங்குதான் இளங்கலையை முடித்தார். இது தவிர நிறைய பொறியாளர்களையும், மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிய பெருமை இக்கல்லூரியையே சேரும்.



வாழ்க்கையை மாற்றிய 10,11,12 !!!!!!!!!

அப்படியே ஊர சுத்தி வந்துட்டு இருந்த காலத்துக்கப்புறம் வந்தது பத்தாவது வகுப்பு. என் இன்னொரு அத்தை வீட்டிற்கு படிப்பதற்காக ஒன்பதாவது வகுப்பு விடுமுறை நாட்களிலேயே அனுப்பப்பட்டேன் . ஒரு மாதிரி வேண்டா வெறுப்பாதான் போனேன். கணிதமும், அறிவியலும் சொல்லிகொடுக்கப்பட்டன. எனக்கு அப்பதான் இதுதான் கணிதம்னு அப்பதான் தெரிந்தது. நிறைய அடிகள் மற்றும் கொட்டுகள் வாங்கி ஓரளவு கற்றுக்கொண்டிருந்தேன். அறிவியல் புத்தகம் எல்லாம் தண்ணி பட்ட பாடு எனக்கு. பின்ன முதல் அட்டைல இருந்து கடைசி அட்டை வரைக்கும் படிச்சா?

படிப்படியா பத்துல இருந்து முன்னேறி 5, 4, 3, 2, கடைசில 1 ம் வாங்கினேன். அப்பொழுது தெரிந்தது வாங்கிய கொட்டுகளின் இன்பம்!!! (அத்தைக்கு நன்றி). கடைசியா பொது தேர்வுல 460 மதிப்பெண்கள். இதுல அறிவியல்ல நூத்துக்கு நூறு வேற!!!!!! (அய்யோ அய்யோ). இந்த மாதிரி கலக்கிட்டுருந்தாலும் கலையையும் விடல. அதுலயும் கலக்குதான். அப்பதான் பள்ளில ரூபன்னா யார்னு தெரிய வந்தது. இதே கலக்கல்கள் தொடந்தது பன்னிரண்டாவது வரை!!!!!!! எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே மாதிரி" "எல்லா புகழும் என் அத்தை ஒருவருக்கே" என்று சொன்னால் அது மிகை ஆகுமா? ஆகாதா நீங்களே சொல்லுங்க?

இதே கலக்கல்கள் தொடரும்னு நினைச்சுட்டுதான் கல்லூரி படிப்புக்கு போனேன். ஆனால் அங்கயும் கலையிலதான் ஜெயிக்க முடிந்தது. பரவாயில்லை ரகம்னு சொல்லலாம்னு வச்சுக்கோங்களேன்.

Thursday, March 20, 2008

ரூபன் ஒரு கேள்விக்குறி!!!!!!!!!!!


ரூபன் ஒரு கேள்விக்குறி!!!!!!!!!!!

என்னைப்பற்றி சொல்கிறேன்:
பெயர்: ? (அதான் தலைப்புலயே சொல்லிடேனே!!!!!!)

ஊர்: திருச்சி
பள்ளி: தூய வளனார் மேல் நிலைப்பள்ளி
இளங்கலை: பொறியியல்
தற்போதய பணி: கணினி மேற்பார்வையளர்
விருப்பம்: இசை மட்டும் இருந்தால் போதும்

எனது குடும்பம் பற்றி சொல்கிறேன்:

அம்மா, அப்பா, அத்தை, தாத்தா மற்றும் பாட்டி அப்புறம் நான், எனது இரண்டு அக்கா, எனக்கு கீழ் ஒரு இரட்டயர்கள். இது ஒரு ஆசிரியர் குடும்பம். ஏனென்றால் வழி வழியாக தாத்தாவிலிருந்து அப்பா, அத்தை, இப்பொழுது இரன்டு அக்கா வரை எல்லாருமே ஆசிரியர்களே!!!!
எங்க குடும்பத்துல "அத்தை"ய பற்றி சொல்லியே ஆகனும். அந்த காலத்துல இருந்து இப்ப வரைக்கும் அவங்க தலைமைலதான் இயங்கிகிட்டிருக்குனு சொன்னா அது மிகையாகாது. அது ஏன்னு கேட்டா அது அப்படி தான்! ஒரு பயம் கலந்த மரியதைனு சொல்லலாம்.

என் இசை குரு:

என்னோட தாத்தா தான் என் இசை குரு. இவரிடம் இருந்துதான் ச ரி க ம ப த நி ஸ கற்றுக்கொண்டேன். அன்று அவர் கற்று கொடுத்த கலை இன்று வரை என் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கீபோர்டில் கை வைக்கும் போதும் மானசீகமாக நினைவு கூறுகிறேன். நாங்க எல்லாம் வளர்ற வரைக்கும் அப்பா கண்டிப்பாதான் இருந்தார். இப்பல்லாம் அப்படி இல்ல. ஒரு நண்பனை போல பழகிட்டு வரார். அவரும் என்ன பண்ணுவார் பாவம், தன்னுடைய ஓய்வை எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்.

பள்ளி படிப்பு:

இத பத்தி சொல்லும்பொழுதே ஒரு ஆனந்தம் தான். முதல் வகுப்பிலிருந்து 5 ம் வகுப்பு வரை ஒரு நடு நிலைப்பள்ளியில் பயின்றேன். அப்பொழுது பிரபு என்ற நண்பன் என் வாழ்வில் மறக்க முடியாதவன். குமரன், பாபுஜி, பாலாஜி, ஜாகிர், பொன்னி, விஜி. இன்று வரை இவர்கள் அனைவரிடமும் தொடர்பு உள்ளது. ஆனால் பிரபுவைத் தவிர!!!!!! (எங்க டா இருக்க நீ?)

அப்புறமா ஆறாவது படிப்பிற்கு தூய வளனார் மேல் நிலைப்பள்ளிக்கு நுழைவுத்தேர்வு எழுதி எங்க அப்பா அவர் வேலை பார்க்கிற பள்ளியிலயே சேர்த்து விட்டுடாரு. என் சந்தோசத்தை எல்லாம் அழிச்சிட்டாரு. எந்த வாத்தியாரா இருந்தாலும் சரி "டேய் நீ லியோ பையன் தான இரு உங்க அப்பன்ட சொல்ரேன் பாரு"னு ஒரே மிரட்டல்கள். எனக்கா ஒரே கடுப்பு அவர் மேல!!! செமயா திட்டுவேன் அவர. (அப்பா உங்கள ரொம்ப திட்டிடேன் மன்னிச்சுடுங்க).

இந்த மாதிரியான மிரட்டல்கள் தொடந்தது எட்டாவது வரை. அப்புறம் தான் வந்து சேர்ந்தானுங்க இன்னொரு விஜி, பாலாஜி, ஜெப்ரி, வினோத், மணிவேல், சீனிவாசன். நாங்க அடிக்காத கூத்து இல்ல, திருடாத திருட்டு இல்ல. லைப்ரரில, கேண்டீன்ல, வெளி கடைகள்லனு ஏகப்பட்ட திருட்டுகள். படிப்பு அப்பல்லாம் சுமார்தான். அப்படியே தொடர்ந்தது ஒன்பதாவது வரை இந்த சேட்டைகள் எல்லாம். அடுத்த வருடத்தை பற்றி தொடரும் பகிர்தலில் பார்ப்போமா?