Wednesday, May 28, 2008

சீனப்பெருஞ்சுவர்

அப்படினா என்ன? அது எங்க இருக்கு?அதோட சிறப்பு அம்சம் என்னனு பார்போம்.மூன்றாம் நூற்றாண்டுல மங்கோலியாவிலிருந்தும்,மஞ்சூரியாவிலிருந்தும் வந்த "காட்டுமிராண்டி"படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள சீன பேரரசால் கட்டப்பட்ட ஒரு தடுப்பு அரண் தான் இந்த பெருஞ்சுவர்.இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழையாம இருக்குறதுக்காக இல்ல.அவர்களுடைய குதிரைகள் நுழையாமல் இருப்பதற்காகவே!

இப்ப நாம பார்க்குற மாதிரி சுவர் ஒரே நேரத்துல கட்டப்படல.வெவ்வேறான கால கட்டத்துலயும்,சூழ்நிலையிலயும்தான் கட்டப்பட்டது.பழைய கின் வம்சம்,மிங் வம்சம்னு நிறைய இருக்கு,அதுல கடைசியா மிங் வம்சத்துலதான் இதனோட கட்டமைப்பு இப்ப நாம பார்க்குற வடிவமைப்புல இருக்கு.இந்த கட்டமைப்பு நடந்த வேளைல நிறைய ஊழியர்கள் எதிரிகளின் தாக்குதலால் தங்களோட உயிர விட்ருக்காங்க,அதனால இது உலகின் "அதி நீளமான மயானம்"னு அழைக்கப்படுது.

இதோட சிறப்பு என்னனா?1987 ல யுனஸ்கோ வால "உலகின் மிக சிறந்த பாரம்பரியங்களில் ஒன்றாக "அறிவிப்பு கொடுத்தத சொல்லலாம்.சந்திரனில் இருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு இது.உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக இப்ப இருக்கு.

கொசுறு:நம்ம பாட புத்தகத்துல எல்லாம் நிலாவுல இருந்து பாத்தா பெரிய சுவர் அப்படியே தெரியும் பாரு !அப்படி சொல்வோம்ல.அதுக்கு ஆப்பு வைக்குறதுக்காக பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி இப்ப சீனாவுல எல்லா பாட புத்தகத்துல இருந்தும் இத பத்தின செய்திய எடுத்துட்டாங்க.

Tuesday, May 20, 2008

கடவுள் யார்?


இந்த கேள்வியானது மனிதனாக பிறந்த ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வாழ்க்கைல ஒரு நிமிஷத்துலயாவது யோசிச்சிருப்பான்.இந்த உலகம் எப்படி வந்தது?மனிதர்கள் எப்படி வந்தாங்க?அவங்களுக்குள்ள ஆசைகள்,இன்பங்கள்,துன்பங்கள்,வேதனைகள் எப்படி வருகின்றன?யார் இதெல்லாம் உருவாக்கினது?கடவுள்னு ஒருத்தரே இல்லனா எப்படி கோயில்களும்,ஆலயங்களும்,மசூதிகளும்,மதங்களும் எப்படி வந்தது?மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு கொலைகளும்,போராட்டங்களும் நடக்குது?இப்படி கேள்விகள் கேட்டுட்டே போகலாம்.

இதற்கான விடைய ஒரு சின்ன கதையின் மூலம் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்(சின்ன வகுப்புல மறைக்கல்வி ஆசிரியர் சொன்னது).கதையின் நாயகன் நாம மேலே சொன்ன மாதிரி ரொம்ப ஆராய்ச்சி பண்ணுவார்.கடவுள்னா யாரு?நம்ம முன்னோர்கள் யார்?ஆதாம்,ஏவாள்னா யாரு அப்படினு ஒரு கடற்கரை ஓரமா உட்கார்ந்து யோசிச்சுட்டே இருக்காரு.அந்த சமயத்துல ஒரு பத்து அடி தூரத்துல ஒரு சின்ன பையன் கடற்கரை மண்ணுல ஒரு சின்ன குழிய தோண்டி அதுல கடல் தண்ணிய கையில் எடுத்துட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா நிரப்பிட்டு இருந்தான்.ரொம்ப நேரமா இது மாதிரி பண்ணிட்டுருந்ததால அந்த மனிதன் ,சிறுவனிடம் ,ஏன் இப்படி நிரப்புரனு கேக்குறார்.அதுக்கு அந்த பையன் ,இங்க இருக்குற எல்லா தண்ணியயும் இந்த குழிழ நிரப்ப போரேனு சொன்னான்.உடனே மனிதன் சிரிச்சுக்கிடே ,அது எப்படி தம்பி முடியும்? கடல் எவ்வளவு பெரிசு? அத எப்படி உன்னால இந்த சின்ன குழிக்குள்ள நிரப்ப முடியும்னு கேட்டார்.அதுக்கு அந்த பையன் சிரிச்சுட்டே "நீங்க உங்க மனசுல ஓடிட்டிருக்கிற வினாவுக்கு விடை தெரியரதுக்குள்ள நான் கடல் தண்ணிய குழிக்குள்ள நிரப்பிடுவேன்"னு சொன்னான்.அப்பதான் நம்ம நாயகனுக்கு புரிய ஆரம்பித்தது.

முடிவு: கடவுள் பற்றிய ஆராய்ச்சி அர்த்தமற்றது.நம்ப வேண்டும் இருக்கார்னு.






Monday, May 19, 2008

பெர்முடா முக்கோணம்

இன்றைக்கு ஒரு பொதுவான விடை தெரியாத கேள்விய பத்தி கொஞ்சம் பார்ப்போம்.
வட அட்லாண்டிக் பெருங்கடல் ல பெர்முடா,மியாமி,பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும்.இதுல என்ன விசேஷம்னுதான கேக்குரிங்க?.இருக்குங்க.இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில அமைஞ்சுருக்குறதுதான்.அப்படி என்ன இருக்கு இதுல? ஆம்!இந்த முக்கோண பரப்பிற்கு உள்ள வர எந்த ஒரு பொருளையும் இது தனக்குள்ள இழுத்துக்குமாம்.பல ஆய்வுகளின் அடிப்படைல இதுவரை 40 கப்பல்களையும்,20 விமானங்களையும்,சிறு சிறு மரக்கலங்களையும் உள்ளிழுத்துருக்கு.

இதுல 1872 ம் ஆண்டுல மேரி செலஸ்டினு பெயர் கொண்ட ஒரு பாய்மரக்கப்பல் தான் இதுல பதிவான முதல் பதிப்பு.ஏன் இப்படி நடக்குதுனு நிறைய ஆராய்ச்சிகளும்,விளக்கவுரைகளும் பல விஞ்ஞானிகள்ட இருந்து கிடைச்சுருக்கு.அதுல வாலன்டைன்னு ஒருத்தர் இந்த மாதிரி காணாமல் போன பொருள்கள் அனைத்தும் எங்கேயும் போய்விடவில்லை.அது எல்லாம் அங்கயேதான் இருக்கின்றன.ஆனால் வேறு பரிமாணத்துல இருக்குனு சொல்லிருக்கார்.அமெரிக்க நாட்டு ஜோதிட வல்லுனர் ஒருத்தர் அந்த பரப்புக்கு அடியில் உள்ள ஒரு சக்தி மையத்துனாலதான் நடக்குதுனு சொல்லிருக்கார்.திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும்னும் சொல்றார்.

அதே மாதிரி படிகங்கள்ல இருந்து வர ஒளி ரேகைகள் இத்தகைய பொருட்களை வேறு பரிணாமத்திற்கு மாற்றி உள்ளிழுக்கின்றன என்ற கருத்தையும் விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.சரி இதோட முடிஞ்சதுனு பார்த்தா இன்னொன்றும் இருக்குங்க.பெர்முடா முக்கோணப்பகுதியின் நேர்புரம் ஜப்பான் நாட்டு தென்கிழக்கு கடற்பகுதில"பிசாசு கடல்"னு ஒன்னு இருக்காம்.அங்கும் இம்மாதிரியான ஜீபூம்பாக்கள் நிறைய நடந்துருக்கு.இங்க காந்த முள் மாறுபாடு இயல்புக்கு குறைவாவே இருக்காம்.அதனால இரண்டுக்கும் பொதுவான தொடர்பும் காரணமும் இருக்குஙாங்க.

அண்மை கால ஆய்வுகள் படி விஞ்ஞானிகள் எல்லா திட பொருள்களும் அதற்குள் உள்ளடக்கிய சக்தியை பெற்றிருப்பதாகவும்,திடப்பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறு உருவம் என்றும் இந்த சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான் வடிவத்துல இருக்குனு முடிவா சொல்றாங்க.இந்த எலக்ட்ரான்களை காலம் என்னும் பரிணாமத்தில் திரும்பி செயல் பட வைத்தால்,அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்ற செயல் முறையை தலைகீழாக செய்தால்,அப்படி செய்யும்போது எல்லா பொருளும் நுண்ணிய அணுக்களாக மாறி காற்றில் கலந்துவிடும்னு முடிவிற்கு வந்துருக்காங்க.இந்த செயல் முறைக்கு "எதிர் மறை செயல் திறன்" பெயரும் வைத்திருக்கிறார்கள்.இதுதான் ஒரு பொருளின் ஐந்தாவது பரிணாமமாம்.

உபயம்: கூகுள் இணையதளம்.

என்னங்க ஓரளவுக்காவது புரியுதா?