Wednesday, June 4, 2008

தமிழ் வழி கல்வி தேவையா?

இந்த கேள்வி எல்லாருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான்.கொஞ்சம் ஆழமா சிந்தித்து பார்த்தால் இந்த கேள்விக்கான விடை ஒரு கேள்விக்குறியாவேதான் இருக்கும்.சமீபத்துல ஒரு தனியார் தொலைகாட்சியில இதை பற்றின விவாதம் நடந்த பொழுது என் மனதில் ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிப்பு.

இரு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை எடுத்துக்கொள்வோம்,ஒருவன் தமிழ் வழிக்கல்வி,மற்றொருவன் ஆங்கிலவழிக்கல்வி,கல்வி ங்குறது எதுக்கு?பாட புத்தகம் குறது எதுக்கு?அவனுடைய அறிவ பெருக்க,நாலு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்க,விஞ்ஞானத்த பத்தி தெரிய.........இப்படி அ அ அ அ அ அ னு சொல்லிட்டே போகலாம்.கொஞ்சம் நடைமுறைக்கு வந்து பார்போம்.தமிழ் வழி பயின்றவன் சுட்டெலி(Mouse),விசை பலகை(Keyboard),வட்டம்,செவ்வகம்,முக்கோணம்,இருசமபக்க முக்கோணம்,உருளை,வகைக்கெழு(Differenciate),கோடிட்ட இடங்களை நிரப்புக( Fill in the blanks).பொருத்துக(Match the following).இதுவே இப்படினா அறிவியல் பாடத்த எடுத்துகிட்டா எவ்வளவு வரையறைகள்.சூத்திரங்கள்?சரிங்க இதெல்லாம் படிச்சுட்டு பொதுத்தேர்வுலயும் 1000 க்கு மேல வாங்கிட்டான்.கல்லூரிக்குள்ள கால எடுத்து வைக்கிறான்.ஒரு துறை ஆசிரியர் இந்த மாணவன "Tell me the Newtons third law?"னு கேக்குறாருனு வைங்க.அவன் எந்திரிச்சு"ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" ங்குறான்.அத்தன பேர் மத்தியிலும் அவனோட நிலைமைய கொஞ்சம் யோசிச்சுபாருங்க.அவனே ஒரு பொறியியல் கல்லூரிக்கோ,மருத்துவ கல்லூரிக்கோ போகும்போது அவனோட நிலைம இன்னும் மோசமாதான் இருக்கும்.இதே மாதிரியான சம்பவம் ஒரு ஊர்ல நடந்து ஒரு தமிழ் வழி பயின்றவனுடைய "உயிரை"எடுத்துருக்குனா அப்ப அந்த கல்வியினுடைய நோக்கம் என்ன? அந்த மாணவன் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்? அப்படினா தமிழ் வழி பயின்றவர்கள் எல்லாம் வெற்றி பெறலயா?அவன் ஒரு கோழையா?இதெல்லாம் வேண்டாம்.கல்வி ஒருவன் வாழ்வதற்கே தவிர வீழ்வதற்கு அல்ல!

மற்ற நாட்டுல எல்லாம் அவன் கணிதத்தையோ,விஞ்ஞானத்தினையோ அவர்களுடைய தாய் மொழியிலயே படிக்கிறாங்க.ஆனா இங்க நடக்குறது என்ன? இந்த மாதிரி தற்கொலை பண்ணிக்கிறவங்களும்,அதற்கு முயற்சி எடுக்குறவங்களும் இந்த நாட்டுல எவ்வளவோ பேர் இருக்காங்க.பாடத்திட்டம் எல்லாம் ஒன்னுதான்னா ஏன் ரெண்டு வழிக்கல்வி? ஆங்கில வழிக்கல்விக்கு இருக்குற முன்னேற்றப்பாதை ஏன் தமிழ் வழிக்கு இல்ல?ஏன் இந்த அரசாங்கம் தமிழ் வழி படிப்பிற்கான முற்போக்கு திட்டம் எதயும் அமுல்படுத்தல?M.A Tamil ல் படித்த ஒருவன் 50000 சம்பளம் வாங்க முடியுமா?முடியும்னா அதற்கான புதிய கல்வி அமைப்பையும்,கல்வி திட்டத்தையும்,வேலை வாய்ப்பையும் இந்த அரசு தருமா?

தீர்வு: இந்த‌ கால‌த்துல‌ எதுவும் நிறைவேறாது.த‌மிழ் த‌மிழ்னு முழ‌க்க‌மிடும் எத்த‌னை த‌லைவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் English Convent ல‌ ப‌டிக்கிறாங்க‌.இந்த‌ மாதிரியான‌ விவா‌த‌ங்க‌ளை தொலைக்காட்சியிலும் ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ளிலும் அல‌சி அல‌சி அவ‌ங்க‌ளோட‌ Rating க‌ உய‌ர்த்திக்கிறாங்க.அவ்வளவு ஏன் ஒருத்த‌ர் ப‌ட‌த்தையே எடுத்து பாத்துட்டாரு.ஓட‌ல‌யே?இதுக்கு என்ன‌ சொல்றது? இந்த‌ Blog அ முடித்த‌வுட‌னே என‌க்கு ஒரு தொலைபேசி அழைப்பு,அதுல‌"What were u doing Rueban?Why you are wasting your timings with the funny things?"எங்க‌ மேனேஜர் ஆங்கிலத்துல‌.அட‌ ஆண்ட‌வா!!!!!!!!!!



5 comments:

Anonymous said...

First we need to consider why do we work;either for job satisfaction or for Money earning.
If it is for satisfaction, then we can learn whatever we like or whatever we want(like studying in tamil.)
If it is for money earning purpose, then its like doing business and there will be no job satisfaction.. just a mechanical life.. in this sense, we got to update our skils wit respect to current market like adopting western culture(dressings), speaking in english(even both knew tamil) those things.. We shouldnt confuse both the options. Its purely their choice.
Only some lucky people got job satisfaction while earning money.. But mostly, we do suppress our thoughts and wishes to earn money. This is the pay we give to live in this so called modern/developing society.

சிவசுப்பிரமணியன் said...

அருமையான பதிவு ரூபன்.. தாய்மொழி வழிக் கல்வி தேவையா? இல்லையா? இந்த விஷயம் கத்தி மேல நடக்குற மாதிரி. என்னை கேட்டா தாய்மொழியையும், ஆங்கிலத்தையும் கட்டாயமா ஒருத்தன் கண்டிப்பா படிக்கனும். ஏன்னா இன்னைக்கு ஆங்கிலம் உலகப் பொது மொழி ஆயிடுச்சு, உலகமயமாக்கல் நடந்துகிட்டு இருக்கு. இந்த நிலைமைல ஒருத்தன் தன்னோட தாய்மொழியையும் மறக்க கூடாது, ஆங்கிலத்தையும் படிக்காம விடக்கூடாது. அதுனால தான் அரசு பள்ளிகள்ல ஆங்கிலமும் இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி நல்ல ஆசிரியர்கள் வேணும்.

ஹிட்லர் சொன்னார்"ஒரு நாட்டை அதிகமா ரத்தம் செலவழிக்காம இருக்கனும்னா, அந்த நாட்டோட மொழியையும், காலாச்சாரத்தையும் சீர்குலைச்சாலே போதும்ன்னு".. இன்னைக்கு அந்த நிலைமை நகக்கு திரும்ப வந்திரக் கூடாது

ரூபஸ் said...

"Tell me the Newtons SECOND law?"

நல்லா எழுதுறீங்க புலால். இந்த விஷயத்தை பொருத்தவரைக்கும் எனக்கு கேப்டனடோ கொள்கை ரொம்ப பிடிக்கும்.
அதாவது " அன்னைத்தமிழை காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம்"

sentamizh said...
This comment has been removed by the author.
இளங்குமரன் said...

M.A Tamil ல் படித்த ஒருவன் 50000 சம்பளம் வாங்க முடியுமா?முடியும்னா

நிச்சயமா தமிழ் ஏற்றம் பெறும். தமிழை அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். என்னுடைய நிறுவனங்களில் தமிழ் படித்திருந்தால் தமிழில் பெயர் வைத்திருந்தால் அதற்குச் சிறப்பு மரியாதை முன்னுரிமை உண்டு.