Friday, July 18, 2008

ஆவிகள் உலகம்

எல்லார்க்கும் இருக்குற ஒரு பொதுவான கேள்விதான்.நம்ம எல்லாம் செத்ததுக்கு அப்புறம் எங்க போறோம்? இதுக்கு ஒவ்வொரு மதத்திலேயும் ஒரு நம்பிக்கையை அடிப்படையா வச்சு சொல்றாங்க.இறந்த பிறகு இன்னொரு உலகம் இருக்கு.அங்க நமக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும்,அதுவும் நம்ம இந்த உலகத்துல செஞ்ச நன்மை தீமைகளை பொறுத்து அப்படினு.

அமெரிக்க நாட்டுல இத பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.ஒரு இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதரை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து விளைவை பார்க்கும்பொழுது அவருடைய ஆத்மா கண்ணாடி பெட்டியின் ஓரத்தில் ஒரு விரிசலோடு சென்றிருக்கிறது.அந்த ஆத்மா மனித உடலின் எந்த பாகத்தின் வழியாக போகிறது என்ற கேள்விக்கு நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நம்முடைய உச்சந்தலையில் உள்ள ஒரு சிறு பள்ளத்தின் வழியாக என்று விடை கிடைக்கிறது.

ஆராய்ச்சி முடிவானது சில ருசிகரமான தகவல்களையும் தருகிறது.இறந்த ஆத்மாக்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை பின் ஆவியாக உருவெடுத்து நிறைவேற்றிக்கொள்கின்றது .அதிலும் நல்ல ஆத்மா,தீமை ஆத்மானு இரண்டு பிரிவுகளாம்.ஆவிகள் உல‌கினை பற்றிய ஆராய்ச்சியை கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.அதில் ஆவிகளுக்கும் மாந்த்ரீகர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டெனவும்,அவர்கள் செய்யும் சில விசேஷ பிராத்தனைகள் மூலம் குடும்ப பிளவு,குடும்ப இணைப்பு,செயலிழக்கசெய்வது போன்றவற்றை வெகு சுலபமாக செய்யலாம் என்பதை காட்டினார்கள்.இதனை ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்ளவே செய்தனர்.

ஆக கடவுள் இருக்கிறார்னு சொல்றவங்க இந்த ஆவி உலகத்தயும் ஒத்துக்குறாங்க.முடிவாக‌ யாருக்கும் கெடுத‌ல் செய்யாம‌லும்,நல்ல‌ க‌ட‌வுள் ப‌க்தியும் ,வளமான யோகா ப‌யிற்சியும் இருக்கும் ஒருவ‌னை எந்த ஒரு தீய‌ ச‌க்தியும் தொட‌ இய‌லாது என்ப‌து என் க‌ருத்து.(ஆவிக‌ள்‌ ப‌த்தி ந‌ம‌க்கு தெரிஞ்ச‌த‌ எழுதுனா "அட‌ பாவி" ங்குறானுங்க‌!)

6 comments:

சிவசுப்பிரமணியன் said...

அட பாவின்னு சொன்னது நான் தாங்க... பையன் நல்லா தான் இருந்தான்.. என்ன்மோ தெரியலை இப்படி ஆயிட்டான் (என் கூட சேர்ந்து).. இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதலாமே ரூபன்

Anonymous said...

i agree.. we are living in the hell. when we get to know/use the 6th sense, we died.
very nice article... keep posting

ரூபஸ் said...

எல்லாம் சரி.. இந்த post ல இருக்குற ஆவி Photo வ விட about me க்கு கீழ இருக்குற போட்டோ இன்னும் அருமையா இருக்கு புலால்...

Template Super

Partha&Parames said...

அது எப்படி ஆராய்ச்சியில் தெரிஞ்சது நல்ல ஆவி கெட்ட ஆவினு?
உதாரணம் இல்லையா?

Sivasanggeri Balan said...

என்னும் நிறைய எழுதிருக்கலாமே, ஆவியை பற்றி. :)

Unknown said...

hi iam giri if you want more details
this topic please contact..
giriedit@gmail.com