Tuesday, June 24, 2008

சுனாமி!

ஜப்பானிய மொழியில் சுனாமி எனப்படுவதற்கு துறைமுகமும்,பேரலையயும் சேர்த்து அர்த்தம் கூறுகிறார்கள்.ஒரு சில நிமிடத்திலிருந்து சில நாட்கள் வரை ராட்சச அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்த "சுனாமி".

சுனாமி எப்படி உருவாகின்றது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூகோளத்தில் ஒரு Plate இருந்ததாகவும் பூமியானது அதன் மேல் தாங்கப்பட்டதாகவும் பின் பல்வேறு தட்ப வெப்ப சூழல்களில் கண்டங்கள் பிரிய பிரிய இந்த Plate களும் பிரியத்தொடங்கின,நிலப்பரப்புகளும்,கடல்களையும் இத்தட்டுக்களே தாங்கி நிற்கின்றன புவியியல் நிபுணர்கள் ஆய்ந்துள்ளனர்.

கடலாழத்தில் ஏற்படும் பாதிப்புகளினாலும்,கடலாழ பூகம்பத்தினாலும்,கடலை ஒட்டிய நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பத்தினாலும்,எரிமலையினாலும்,கிரகங்களின் செயல்பாடுகளினாலும்,கடலின் அடியில் ஏற்படும் பெளதிக மாற்றத்தினாலும் வருகின்றது.ஆராய்ச்சியாளர்களின் கூற்று சரியாயின் முதன் முதலில் கி.மி.365 ம் நூற்றாண்டில் ஜூலை 21ம் தேதி எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியாவில் தோன்றியுள்ளது.

சமீப நூற்றாண்டை கண்க்கிட்டு பார்த்தால் 1755 ல் போர்ச்சுகலில் லிஸ்பனில் நவம்பர் 11 லும்,1883 ஜாவா சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் தீவு.அமெரிக்காதான் முதன்முதலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது.இந்த அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை கருவிகள் வழியாக ,கருவிகள் நீரழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி செயற்கைகோளுக்கு அனுப்பி அதிலிருந்து பெறப்படும் தரைவழி தகவல்களை தன் உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்புகிறது.

என்னுடைய முந்தைய பகிர்தலில் கடவுள் யார்? கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி தேவையா இல்லையா? என சில பகுதிகள் இருந்தது.ஆனால் இப்பகிர்தல் அதற்கு எதிர்மறையான எண்ண ஓட்டத்தை மனதில் ஏற்படுத்தியது.கடவுள் கடவுள்னு சொல்றோமே அப்படினா அவர் ஏன் இப்படிப்பட்ட பேரலைகளை தடுத்திருக்க கூடாது?எவ்வளவு உயிர் சேதம்?எத்துணை சிறு குழந்தைகள்!ஒரு வேளை இதை விட ஒரு பேரழிவை தடுப்பதற்காக சுனாமி வந்ததாகக்கொண்டாலும்.சுனாமியால் இறந்த ஆத்மாக்களுக்கு பதில்???

சுனாமியில் இறந்த ஆத்மாக்களுக்கு என்னுடைய சமர்ப்பணம்.

1 comments:

சிவசுப்பிரமணியன் said...

//அப்படினா அவர் ஏன் இப்படிப்பட்ட பேரலைகளை தடுத்திருக்க கூடாது?எவ்வளவு உயிர் சேதம்?எத்துணை சிறு குழந்தைகள்!ஒரு வேளை இதை விட ஒரு பேரழிவை தடுப்பதற்காக சுனாமி வந்ததாகக் கொண்டாலும்.சுனாமியால் இறந்த ஆத்மாக்களுக்கு பதில்???//
சுனாமி பற்றிய அருமையான பதிவு ரூபன். ஆனால் நீ கேட்ட கேல்விகளுக்கும் கடவுளுக்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து. எரிமலை வெடிப்பு, பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம், காட்டுத்தீ இவைகள் எல்லாம் பூமி தோண்றிய காலத்திலிருந்தே பூமியில் நிகழும் நிகழ்வுகள். எரிமலைகள் வெடிக்காமல் இருந்திருந்தால் இந்த பூமியில் ஒரு உயிரினம் கூட தோண்றி இருக்க முடியாது. இதற்காக கடவுளை குறை சொல்வதில் அர்த்தம் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் பூமியில் அதிகரிக்கும் மக்கட்தொகை காரணமாக பூமி அந்த கனத்தை சரி சமமாக்க, நிலத்தை தாங்கி இருக்கும் அதன் டெக்டானிக் ப்ளேட்டுகளை(Tectonic Plates) சரி செய்கிறது. இதனால் பூமியின் மேல் நடை பெறும் மாற்றங்கள் தான் நில நடுக்கமும், சுனாமியும். அதே போல் சுனாமி எப்போதும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் வேகம் அதிகம் ஆகும் போது தான் நம்மால் உணரமுடியும். வேகம் குறைவாக இருந்தால் சாதரண அலையோடு சேர்ந்து கரைந்துவிடும்.

கடவுளை இதில் குற்றம் சொல்ல வேண்டாம். கடற்கரையை பாதுகாக்கும் மாங்குரோவ்(Mangrove) காடுகளை கடவுள் அழிக்கவில்லை, நாம் தான் அழித்தோம் அதற்கான விளைவுதான் நாம் சந்தித்த அழிவுகள்.