Wednesday, September 24, 2008

மனிதாபிமானம்

இடம்: சென்னை
பெயர்: ஹிதேந்திரன்
நாள் : 24.09.2008

நடந்த சம்பவங்கள் அனைவரின் மனத்தையும் உருக்குவதாக இருந்தது.சென்னையில் உள்ள ஒரு மருத்துவத் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் ஹிதேந்திரன்.ஒரு வேளையில் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்ற பொழுது விபத்தில் அடி பட்டு பின் தலையில் ரத்தத்துடன் அடி பட்டு கிடக்கிறான். அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கையில் கிடைத்தது செய்தி.அடி பட்டதில் அவனது மூளை செயலற்று விட்டதாகவும் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை எனவும்.பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதால் நிலைமையை உணர்ந்தவர்களாய் தங்களை தேற்றிக்கொள்கிறார்கள் அது மட்டுமல்ல தன் மகனது உடல் உறுப்புக்களை தானமாக்க முடிவு செய்கின்றனர்.அதன் படி அவனது உடல் உறுப்புக்களை நுரையீரல்,கண்கள்,இதயம் ஒவ்வொன்றையும் தேவைப்படுவோர்க்கு அளிக்க முற்படுகிறார்கள்.

இதில் மற்ற உறுப்புக்களை விட இதயமானது ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அடுத்த அரை மணி நேரத்திற்க்குள் பொருத்தப் பட வேண்டும்.என்ன செய்வது ? கொடுக்கப்பட வேண்டிய மருத்துவமனை உள்ள இடம் 20 கி.மீ தொலைவில்.சாமானிய ஓட்டுனர்களால் போக்குவரத்து நெரிசல் உள்ள சென்னையில் கொண்டு சேர்க்க முடியாத நிலை.அதனால் அவர்கள் காவல் துறையின் உதவியை நாடுகிறார்கள்.உதவி கமிஷ்னர் மனோகரன் அவர்கள் உதவியால் ஒரு துணையாளருடன் போக்குவரத்தை சரி செய்ய ஆம்புலன்ஸ் உடன் செல்வதற்காக பணிக்கப்பட்டனர்.பின்னர் நடந்ததோ வேறு.ஹிமேந்திரனின் இதயத்தை ஒரு குளிர்சாதன்ப்பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு மருத்துவர் வெளியே வர ,அந்த நிலையில் ஆப்புலன்ஸ்க்கும் , காவல் துறையின் வாகனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் காவல் துறையின் வாகனத்தில் ஏறிக்கொள்கிறார்.துரித நேரத்தில் காவல் துறை தாமதிக்காமல் அந்த வாகனத்திலேயே செல்ல ஓட்டுனரை பணிக்கிறார்.ஓட்டுனரும் தன் நிலையை கருத்தில் கொள்ளாமல் ஒரு வழிப்பாதையும் கடந்து சென்று மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சென்று சேர்க்கிறார்.6 மணி நேர போரட்டத்திற்க்கு பின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்பொழுது ஹிமேந்திரனின் இதயம் ஒரு 9 வயது சிறுமிக்குள் உயிராய்...

ஹிமேந்திரன் என்ற சொல்லுக்கு " இதயத்தை கொள்ளை கொள்பவன் " என்று பொருளாம்.

நன்றிகள் அவர்களின் பெற்றோருக்கும்,காவல் துறைக்கும்.

Wednesday, August 6, 2008

ராஜா ராஜாதான்

இசையை உருவாக்க இசையமைப்பாளர்கள் முயல்கிறார்கள்.தானாக வருவதுதான் இசை.நான் பொதுவாக இசை விழாக்களில் கலந்து கொள்வது இல்லை.கதை பிடித்தால்தான் இசை அமைப்பேன்.இந்த திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் தேவை என இயக்குனர் கூறினார்.ஆனால் அவர் கூறிய கதையில் எட்டு இடங்களில் பாடல்களை சேர்க்கலாம் என தோன்றியது.அதற்காக ஒரு மணி நேரத்தில் எட்டு மெட்டுகளையும் போட்டுக்கொடுத்தேன்.இது தானாக அமைவதுதான்.நானாக ஒரு மணி நேரத்தில் எட்டு பாடல்களையும் உருவாக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் எப்படி இசையமைக்கிறேன்.எப்படி மெட்டு அமைக்கிறேன் என்பதை பேட்டிகளில் கூறுகிறார்கள்.அனைத்து இசையமைப்பாளர்களும் இசையை அமைக்க முயல்கிறார்கள்.ஆனால் நான் இசையை உருவாக்குவதில்லை.அது தானாக எனக்குள் நுழைகிறது.பறவை பறப்பது போல கம்ப்யூட்டரில் வரையலாம்.ஆனால் நிஜமாக பறவை பறந்தால் எப்படி இருக்கும்? அது போலதான் இதுவும்.

"மல்லப்பூவ்வூ" பட கேசட் வெளியீட்டு விழாவில் இசைஞானியின் உரை.


Friday, July 18, 2008

ஆவிகள் உலகம்

எல்லார்க்கும் இருக்குற ஒரு பொதுவான கேள்விதான்.நம்ம எல்லாம் செத்ததுக்கு அப்புறம் எங்க போறோம்? இதுக்கு ஒவ்வொரு மதத்திலேயும் ஒரு நம்பிக்கையை அடிப்படையா வச்சு சொல்றாங்க.இறந்த பிறகு இன்னொரு உலகம் இருக்கு.அங்க நமக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும்,அதுவும் நம்ம இந்த உலகத்துல செஞ்ச நன்மை தீமைகளை பொறுத்து அப்படினு.

அமெரிக்க நாட்டுல இத பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.ஒரு இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதரை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து விளைவை பார்க்கும்பொழுது அவருடைய ஆத்மா கண்ணாடி பெட்டியின் ஓரத்தில் ஒரு விரிசலோடு சென்றிருக்கிறது.அந்த ஆத்மா மனித உடலின் எந்த பாகத்தின் வழியாக போகிறது என்ற கேள்விக்கு நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நம்முடைய உச்சந்தலையில் உள்ள ஒரு சிறு பள்ளத்தின் வழியாக என்று விடை கிடைக்கிறது.

ஆராய்ச்சி முடிவானது சில ருசிகரமான தகவல்களையும் தருகிறது.இறந்த ஆத்மாக்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை பின் ஆவியாக உருவெடுத்து நிறைவேற்றிக்கொள்கின்றது .அதிலும் நல்ல ஆத்மா,தீமை ஆத்மானு இரண்டு பிரிவுகளாம்.ஆவிகள் உல‌கினை பற்றிய ஆராய்ச்சியை கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.அதில் ஆவிகளுக்கும் மாந்த்ரீகர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டெனவும்,அவர்கள் செய்யும் சில விசேஷ பிராத்தனைகள் மூலம் குடும்ப பிளவு,குடும்ப இணைப்பு,செயலிழக்கசெய்வது போன்றவற்றை வெகு சுலபமாக செய்யலாம் என்பதை காட்டினார்கள்.இதனை ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்ளவே செய்தனர்.

ஆக கடவுள் இருக்கிறார்னு சொல்றவங்க இந்த ஆவி உலகத்தயும் ஒத்துக்குறாங்க.முடிவாக‌ யாருக்கும் கெடுத‌ல் செய்யாம‌லும்,நல்ல‌ க‌ட‌வுள் ப‌க்தியும் ,வளமான யோகா ப‌யிற்சியும் இருக்கும் ஒருவ‌னை எந்த ஒரு தீய‌ ச‌க்தியும் தொட‌ இய‌லாது என்ப‌து என் க‌ருத்து.(ஆவிக‌ள்‌ ப‌த்தி ந‌ம‌க்கு தெரிஞ்ச‌த‌ எழுதுனா "அட‌ பாவி" ங்குறானுங்க‌!)

Wednesday, June 25, 2008

பீனிக்ஸ் விண்கலம்

பீனிக்ஸ் என்ப‌து செவ்வாய் கோள் ப‌ற்றி ஆய்வுக‌ள் மேற்கொள்வ‌த‌ற்காக‌ விண்ணுக்கு ஏவ‌ப்ப‌ட்ட‌ ஒரு ஆள் இல்லாத‌ விண்க‌ல‌ம்.செவ்வாய் ப‌ற்றிய ஆய்வுக‌ள் ந‌ட‌த்த‌ தேவையான பல‌ க‌ருவிக‌ள் இதில் உள்ள‌ன‌.இத‌னுடைய‌ நோக்க‌ம் என்ன‌வெனில் அங்கு உயிரின‌ங்க‌ள் எதாவ‌து வாழ‌ முடியுமா?அங்குள்ள‌ நீரின் த‌ன்மை,ம‌ண்ணின் த‌ன்மை இவ‌ற்றை அறிய‌வே.

இந்த‌ விண்க‌ல‌மான‌து நாசா ஆய்வு மைய‌த்தின் ஆத‌ர‌வுட‌ன் அரிசோனா ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் மூல‌ம் ஆக‌ஸ்ட் 4,2007 ம் வ‌ருட‌ம் அனுப்ப‌ப்ப‌ட்ட‌து.இது "புளோரிடா" மாகாண‌த்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்ப‌ட்ட‌து.இது ஐக்கிய‌ அமெரிக்கா,க‌ன‌டா,சுவிட்ச‌ர்லாந்து,ம‌ற்றும் ஜெர்ம‌னி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளின் கூட்டு முய‌ற்சி ஆகும்.செவ்வாயில் உறைப‌னி அதிக‌ம் உள்ள‌ இட‌த்திலிருந்து ம‌ண்ணைத்தோண்டி அத‌னை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை உட‌னுக்குட‌ன் அனுப்பும்.க‌டைசியாக‌ கிடைத்த‌ த‌க‌வ‌லின்ப‌டி செவ்வாயில் ப‌னிக்க‌ட்டி இருப்ப‌து உறுதியாயிருக்கிற‌து.இத‌ன் எடை 350 கி.கி,பூமியிலிருந்து செவ்வாயில் இற‌ங்க‌ எடித்துக்கொள்ளும் கால‌ம் 92.46 நாட்க‌ள்.


Tuesday, June 24, 2008

சுனாமி!

ஜப்பானிய மொழியில் சுனாமி எனப்படுவதற்கு துறைமுகமும்,பேரலையயும் சேர்த்து அர்த்தம் கூறுகிறார்கள்.ஒரு சில நிமிடத்திலிருந்து சில நாட்கள் வரை ராட்சச அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்த "சுனாமி".

சுனாமி எப்படி உருவாகின்றது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூகோளத்தில் ஒரு Plate இருந்ததாகவும் பூமியானது அதன் மேல் தாங்கப்பட்டதாகவும் பின் பல்வேறு தட்ப வெப்ப சூழல்களில் கண்டங்கள் பிரிய பிரிய இந்த Plate களும் பிரியத்தொடங்கின,நிலப்பரப்புகளும்,கடல்களையும் இத்தட்டுக்களே தாங்கி நிற்கின்றன புவியியல் நிபுணர்கள் ஆய்ந்துள்ளனர்.

கடலாழத்தில் ஏற்படும் பாதிப்புகளினாலும்,கடலாழ பூகம்பத்தினாலும்,கடலை ஒட்டிய நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பத்தினாலும்,எரிமலையினாலும்,கிரகங்களின் செயல்பாடுகளினாலும்,கடலின் அடியில் ஏற்படும் பெளதிக மாற்றத்தினாலும் வருகின்றது.ஆராய்ச்சியாளர்களின் கூற்று சரியாயின் முதன் முதலில் கி.மி.365 ம் நூற்றாண்டில் ஜூலை 21ம் தேதி எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியாவில் தோன்றியுள்ளது.

சமீப நூற்றாண்டை கண்க்கிட்டு பார்த்தால் 1755 ல் போர்ச்சுகலில் லிஸ்பனில் நவம்பர் 11 லும்,1883 ஜாவா சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் தீவு.அமெரிக்காதான் முதன்முதலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது.இந்த அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை கருவிகள் வழியாக ,கருவிகள் நீரழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி செயற்கைகோளுக்கு அனுப்பி அதிலிருந்து பெறப்படும் தரைவழி தகவல்களை தன் உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்புகிறது.

என்னுடைய முந்தைய பகிர்தலில் கடவுள் யார்? கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி தேவையா இல்லையா? என சில பகுதிகள் இருந்தது.ஆனால் இப்பகிர்தல் அதற்கு எதிர்மறையான எண்ண ஓட்டத்தை மனதில் ஏற்படுத்தியது.கடவுள் கடவுள்னு சொல்றோமே அப்படினா அவர் ஏன் இப்படிப்பட்ட பேரலைகளை தடுத்திருக்க கூடாது?எவ்வளவு உயிர் சேதம்?எத்துணை சிறு குழந்தைகள்!ஒரு வேளை இதை விட ஒரு பேரழிவை தடுப்பதற்காக சுனாமி வந்ததாகக்கொண்டாலும்.சுனாமியால் இறந்த ஆத்மாக்களுக்கு பதில்???

சுனாமியில் இறந்த ஆத்மாக்களுக்கு என்னுடைய சமர்ப்பணம்.

Friday, June 20, 2008

தெரியல‌யே!!


நீயும் நானும் சொந்த‌மில்லை
பேசிக்கொண்ட‌தில்லை
க‌டிதப்‌ ப‌ரிமாற்ற‌மும் இருந்த‌தில்லை
இருந்தாலும் பிடிக்கிற‌தே!!!
த‌லைப்பு காத‌ல்னு வைப்போமா? காம‌ம்னு வைப்போமா?

Saturday, June 7, 2008

என் அறிவியல் ஆசிரியருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள திரு.அற்புதராஜ் ஐயா அவர்களுக்கு

நான் தங்களிடம் ஏழாம் வகுப்பு பயின்றேன்.தங்களுடைய அறிவியல் பாட வகுப்பில் ஒரு முறை தாங்கள் ஒரு 1/2 குயர் நோட்டு வரைபடத்திற்காக போடச்சொன்னீர்கள்.ஆனால் நான் ஒரு குயர் நோட்டு போட்டு அன்றைக்கு இரவு முழுதும் கண் விழித்து வரைந்து அடுத்த நாள் தங்களிடம் நீட்ட நீங்களோ என் முகத்தில் விட்டெறிந்தீர்கள்.அப்புறம் சில பல உதைகள்.ஏன் என்று தெரியவில்லை.ஓரு வேளை எனது தந்தையும் அதே பள்ளியில் வேலை பார்த்த‌தாலோ என்னவோ உங்க அப்பா இருக்குறாருங்குற திமிரானு கேட்டு அடிச்சிங்க.இறுத்தேர்வு முடியும் வரை என்னிடம் பாடம் சம்மந்தமாக எந்த கேள்விகளையும் கேட்கவில்லை.காலப்போக்கில் நான் ஒவ்வொரு வகுப்பாக மாறும்போதும் எப்பொழுது உங்களை பார்த்தாலும் வணக்கம் செலுத்துவேன்.ஆனால் தாங்கள் ஒரு சிறு புன்னகையை கூட விட்டு சென்றதில்லை.இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்களை தெப்பக்குள வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது சந்திக்க நேர்தது."சரி இன்னைக்காவது சார் சிரிப்பாரு"என்ற என் அர்ப்ப ஆசையயும் பொய்யாக்கிவிட்டு சென்றீர்கள் என் வணக்கத்திற்கு பின்.

தொடரும் சார் என் வணக்கம்.

நன்றி.


தங்களின் கீழ்படிந்த மாணவன்
ரூபன்.L


பிக்ஸர் ரீசைஸர்(Picture Resizer)

நம்ம கேமராவிலோ அல்லது செல்போனிலோ எடுக்கும் புகைப்படங்களை இணையத்திலிருந்து மற்றவருக்கு மின்னஞ்சல் அனுப்பும்பொழுது அதன் அளவை குறைப்பதற்காக பல வசதிகளுடன் இணையத்தில் உள்ள ஒரு சாப்ட்வேரை பற்றிய பகிர்தல் இது.

இத‌ற்கு Picture Resizeர்னு ஒரு சாப்ட்வேர் இணைய‌த்துல‌ இல‌வ‌ச‌மா கிடைக்குது.அப்ப‌டி என்ன‌ விசேஷ‌ம் இதுல‌ இருக்குனு பார்த்தா ,உதார‌ண‌த்துக்கு ஒரு file "JPEG" format ல‌ இருக்குன்னா அத‌னை "GIF" format ற்கோ அல்ல‌து "BMP" format க்கோ எளிதாக‌ மாற்ற‌ முடியும்.அந்த‌ மாதிரி ம‌ற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌த்தை வேறொரு புதிய‌ folder ல‌ Save ப‌ண்ண‌ முடியும்.ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளையும் ஒரே நேர‌த்துல‌ மாற்ற‌ முடியும்.டிஜிட்ட‌ல் போட்டோகிராப‌ர்க‌ளுக்கு இந்த‌ சாப்ட்வேர் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌து.


இத‌னை
http://bluefive.pair.com/pixresizer.htm மூல‌ம் பெற‌லாம்.

Wednesday, June 4, 2008

தமிழ் வழி கல்வி தேவையா?

இந்த கேள்வி எல்லாருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான்.கொஞ்சம் ஆழமா சிந்தித்து பார்த்தால் இந்த கேள்விக்கான விடை ஒரு கேள்விக்குறியாவேதான் இருக்கும்.சமீபத்துல ஒரு தனியார் தொலைகாட்சியில இதை பற்றின விவாதம் நடந்த பொழுது என் மனதில் ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிப்பு.

இரு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை எடுத்துக்கொள்வோம்,ஒருவன் தமிழ் வழிக்கல்வி,மற்றொருவன் ஆங்கிலவழிக்கல்வி,கல்வி ங்குறது எதுக்கு?பாட புத்தகம் குறது எதுக்கு?அவனுடைய அறிவ பெருக்க,நாலு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்க,விஞ்ஞானத்த பத்தி தெரிய.........இப்படி அ அ அ அ அ அ னு சொல்லிட்டே போகலாம்.கொஞ்சம் நடைமுறைக்கு வந்து பார்போம்.தமிழ் வழி பயின்றவன் சுட்டெலி(Mouse),விசை பலகை(Keyboard),வட்டம்,செவ்வகம்,முக்கோணம்,இருசமபக்க முக்கோணம்,உருளை,வகைக்கெழு(Differenciate),கோடிட்ட இடங்களை நிரப்புக( Fill in the blanks).பொருத்துக(Match the following).இதுவே இப்படினா அறிவியல் பாடத்த எடுத்துகிட்டா எவ்வளவு வரையறைகள்.சூத்திரங்கள்?சரிங்க இதெல்லாம் படிச்சுட்டு பொதுத்தேர்வுலயும் 1000 க்கு மேல வாங்கிட்டான்.கல்லூரிக்குள்ள கால எடுத்து வைக்கிறான்.ஒரு துறை ஆசிரியர் இந்த மாணவன "Tell me the Newtons third law?"னு கேக்குறாருனு வைங்க.அவன் எந்திரிச்சு"ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" ங்குறான்.அத்தன பேர் மத்தியிலும் அவனோட நிலைமைய கொஞ்சம் யோசிச்சுபாருங்க.அவனே ஒரு பொறியியல் கல்லூரிக்கோ,மருத்துவ கல்லூரிக்கோ போகும்போது அவனோட நிலைம இன்னும் மோசமாதான் இருக்கும்.இதே மாதிரியான சம்பவம் ஒரு ஊர்ல நடந்து ஒரு தமிழ் வழி பயின்றவனுடைய "உயிரை"எடுத்துருக்குனா அப்ப அந்த கல்வியினுடைய நோக்கம் என்ன? அந்த மாணவன் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்? அப்படினா தமிழ் வழி பயின்றவர்கள் எல்லாம் வெற்றி பெறலயா?அவன் ஒரு கோழையா?இதெல்லாம் வேண்டாம்.கல்வி ஒருவன் வாழ்வதற்கே தவிர வீழ்வதற்கு அல்ல!

மற்ற நாட்டுல எல்லாம் அவன் கணிதத்தையோ,விஞ்ஞானத்தினையோ அவர்களுடைய தாய் மொழியிலயே படிக்கிறாங்க.ஆனா இங்க நடக்குறது என்ன? இந்த மாதிரி தற்கொலை பண்ணிக்கிறவங்களும்,அதற்கு முயற்சி எடுக்குறவங்களும் இந்த நாட்டுல எவ்வளவோ பேர் இருக்காங்க.பாடத்திட்டம் எல்லாம் ஒன்னுதான்னா ஏன் ரெண்டு வழிக்கல்வி? ஆங்கில வழிக்கல்விக்கு இருக்குற முன்னேற்றப்பாதை ஏன் தமிழ் வழிக்கு இல்ல?ஏன் இந்த அரசாங்கம் தமிழ் வழி படிப்பிற்கான முற்போக்கு திட்டம் எதயும் அமுல்படுத்தல?M.A Tamil ல் படித்த ஒருவன் 50000 சம்பளம் வாங்க முடியுமா?முடியும்னா அதற்கான புதிய கல்வி அமைப்பையும்,கல்வி திட்டத்தையும்,வேலை வாய்ப்பையும் இந்த அரசு தருமா?

தீர்வு: இந்த‌ கால‌த்துல‌ எதுவும் நிறைவேறாது.த‌மிழ் த‌மிழ்னு முழ‌க்க‌மிடும் எத்த‌னை த‌லைவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் English Convent ல‌ ப‌டிக்கிறாங்க‌.இந்த‌ மாதிரியான‌ விவா‌த‌ங்க‌ளை தொலைக்காட்சியிலும் ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ளிலும் அல‌சி அல‌சி அவ‌ங்க‌ளோட‌ Rating க‌ உய‌ர்த்திக்கிறாங்க.அவ்வளவு ஏன் ஒருத்த‌ர் ப‌ட‌த்தையே எடுத்து பாத்துட்டாரு.ஓட‌ல‌யே?இதுக்கு என்ன‌ சொல்றது? இந்த‌ Blog அ முடித்த‌வுட‌னே என‌க்கு ஒரு தொலைபேசி அழைப்பு,அதுல‌"What were u doing Rueban?Why you are wasting your timings with the funny things?"எங்க‌ மேனேஜர் ஆங்கிலத்துல‌.அட‌ ஆண்ட‌வா!!!!!!!!!!Tuesday, June 3, 2008

கணிணி பற்றிய சில தகவல்கள்

சில சமயம் நம்ம இணையத்துல இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யப்படும் சாப்ட்வேர்களில் சிலவற்றை எளிதாக அழிக்க முடியாது.சாதாரணமாக "control panel" ல"add and remove programs" போய் அழிப்போம் இல்லையா?அப்படியும் அழிக்க முடியாத சில சாப்ட்வேர்களை ஒரு சில "Third Party Softwares" மூலமாதான் அழிக்க முடியும்.ஏன் அத அழிக்க முடியலனா NTFS file system ல அதற்கு அனுமதி இல்லை. Administrator இல்லனா அது தொடர்பான group ல login ல‌ இருந்துதான் அத செய்ய முடியும்.

இப்ப‌டி செய்தும் நீக்க‌ முடிய‌ல‌னா unlocker போன்ற‌ சாப்ட்வேர்க‌ள் மூல‌மா இந்த‌ சிக்க‌ல‌ ச‌ரி செய்ய‌லாம்.200kb அள‌வு கொண்ட‌ இந்த‌ சாப்ட்வேரை"
http://ccollomb.free.fr/unlocker/" என்ற‌ இணைய‌த‌ள‌த்துல‌ இருந்து பெற‌லாம்.ட‌வுன்லோட் செய்து இன்ஸ்டாலுக்கு பின் குறிப்பிட்ட‌ folder ஐ தேர்வு செய்து Right click செய்து எளிதாக‌ நீக்க‌லாம்.