
பெயர்: ஹிதேந்திரன்
நாள் : 24.09.2008
நடந்த சம்பவங்கள் அனைவரின் மனத்தையும் உருக்குவதாக இருந்தது.சென்னையில் உள்ள ஒரு மருத்துவத் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் ஹிதேந்திரன்.ஒரு வேளையில் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்ற பொழுது விபத்தில் அடி பட்டு பின் தலையில் ரத்தத்துடன் அடி பட்டு கிடக்கிறான். அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கையில் கிடைத்தது செய்தி.அடி பட்டதில் அவனது மூளை செயலற்று விட்டதாகவும் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை எனவும்.பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதால் நிலைமையை உணர்ந்தவர்களாய் தங்களை தேற்றிக்கொள்கிறார்கள் அது மட்டுமல்ல தன் மகனது உடல் உறுப்புக்களை தானமாக்க முடிவு செய்கின்றனர்.அதன் படி அவனது உடல் உறுப்புக்களை நுரையீரல்,கண்கள்,இதயம் ஒவ்வொன்றையும் தேவைப்படுவோர்க்கு அளிக்க முற்படுகிறார்கள்.

இதில் மற்ற உறுப்புக்களை விட இதயமானது ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அடுத்த அரை மணி நேரத்திற்க்குள் பொருத்தப் பட வேண்டும்.என்ன செய்வது ? கொடுக்கப்பட வேண்டிய மருத்துவமனை உள்ள இடம் 20 கி.மீ தொலைவில்.சாமானிய ஓட்டுனர்களால் போக்குவரத்து நெரிசல் உள்ள சென்னையில் கொண்டு சேர்க்க முடியாத நிலை.அதனால் அவர்கள் காவல் துறையின் உதவியை நாடுகிறார்கள்.உதவி கமிஷ்னர் மனோகரன் அவர்கள் உதவியால் ஒரு துணையாளருடன் போக்குவரத்தை சரி செய்ய ஆம்புலன்ஸ் உடன் செல்வதற்காக பணிக்கப்பட்டனர்.பின்னர் நடந்ததோ வேறு.ஹிமேந்திரனின் இதயத்தை ஒரு குளிர்சாதன்ப்பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு மருத்துவர் வெளியே வர ,அந்த நிலையில் ஆப்புலன்ஸ்க்கும் , காவல் துறையின் வாகனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் காவல் துறையின் வாகனத்தில் ஏறிக்கொள்கிறார்.துரித நேரத்தில் காவல் துறை தாமதிக்காமல் அந்த வாகனத்திலேயே செல்ல ஓட்டுனரை பணிக்கிறார்.ஓட்டுனரும் தன் நிலையை கருத்தில் கொள்ளாமல் ஒரு வழிப்பாதையும் கடந்து சென்று மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சென்று சேர்க்கிறார்.6 மணி நேர போரட்டத்திற்க்கு பின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்பொழுது ஹிமேந்திரனின் இதயம் ஒரு 9 வயது சிறுமிக்குள் உயிராய்...
ஹிமேந்திரன் என்ற சொல்லுக்கு " இதயத்தை கொள்ளை கொள்பவன் " என்று பொருளாம்.
நன்றிகள் அவர்களின் பெற்றோருக்கும்,காவல் துறைக்கும்.
ஹிமேந்திரன் என்ற சொல்லுக்கு " இதயத்தை கொள்ளை கொள்பவன் " என்று பொருளாம்.
நன்றிகள் அவர்களின் பெற்றோருக்கும்,காவல் துறைக்கும்.
2 comments:
மனிதநேயம் இன்னும் உயிர்வாழ்கிறது..
கண்கள் கலங்க வைக்கும் செய்தி
அந்த பெற்றொர்கள் அரிய காரியம் செய்திருக்கிறார்கள்.. என்னத்தான் காவல் துறையின் மீது எனக்கு சிறு கோபம் இருந்தாலும்... இந்த நிகழ்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. ஹிதேந்திரன் இறந்தும் வாழ்கிறார்.
Post a Comment