Wednesday, August 6, 2008

ராஜா ராஜாதான்

இசையை உருவாக்க இசையமைப்பாளர்கள் முயல்கிறார்கள்.தானாக வருவதுதான் இசை.நான் பொதுவாக இசை விழாக்களில் கலந்து கொள்வது இல்லை.கதை பிடித்தால்தான் இசை அமைப்பேன்.இந்த திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் தேவை என இயக்குனர் கூறினார்.ஆனால் அவர் கூறிய கதையில் எட்டு இடங்களில் பாடல்களை சேர்க்கலாம் என தோன்றியது.அதற்காக ஒரு மணி நேரத்தில் எட்டு மெட்டுகளையும் போட்டுக்கொடுத்தேன்.இது தானாக அமைவதுதான்.நானாக ஒரு மணி நேரத்தில் எட்டு பாடல்களையும் உருவாக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் எப்படி இசையமைக்கிறேன்.எப்படி மெட்டு அமைக்கிறேன் என்பதை பேட்டிகளில் கூறுகிறார்கள்.அனைத்து இசையமைப்பாளர்களும் இசையை அமைக்க முயல்கிறார்கள்.ஆனால் நான் இசையை உருவாக்குவதில்லை.அது தானாக எனக்குள் நுழைகிறது.பறவை பறப்பது போல கம்ப்யூட்டரில் வரையலாம்.ஆனால் நிஜமாக பறவை பறந்தால் எப்படி இருக்கும்? அது போலதான் இதுவும்.

"மல்லப்பூவ்வூ" பட கேசட் வெளியீட்டு விழாவில் இசைஞானியின் உரை.


4 comments:

சிவசுப்பிரமணியன் said...

கண்டிப்பாக இது உண்மை தான் ரூபன்.. அழகிய இசை என்பது நம் ஜீவனிலிருந்து தானாக வெளிவர வேண்டும்.. அதனால் தான் இன்று வரையில் நாம் இளையராஜா அவர்களின் இசையை சலிக்காமல் ரசிக்க முடிகிறது. மற்ற இசையமைப்பாளர்கள பல 'ஹிட்' பாடல்களை கொடுத்திருந்தாலும் ஒரு சில பாடல்கள் மட்டும் தான் இன்னும் நெஞ்சில் நிற்கின்றன. இதற்கு இசைஞானி கூறிய விளக்கம் தான் காரணம்

rahini said...

unmayil rajathaan ivar

Anonymous said...

present sir

இளங்குமரன் said...

அருமையான தகவல். நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பும் சிறப்பாக உள்ளது. ராசா ராசா தான்.