ஜப்பானிய மொழியில் சுனாமி எனப்படுவதற்கு துறைமுகமும்,பேரலையயும் சேர்த்து அர்த்தம் கூறுகிறார்கள்.ஒரு சில நிமிடத்திலிருந்து சில நாட்கள் வரை ராட்சச அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்த "சுனாமி".
சுனாமி எப்படி உருவாகின்றது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூகோளத்தில் ஒரு Plate இருந்ததாகவும் பூமியானது அதன் மேல் தாங்கப்பட்டதாகவும் பின் பல்வேறு தட்ப வெப்ப சூழல்களில் கண்டங்கள் பிரிய பிரிய இந்த Plate களும் பிரியத்தொடங்கின,நிலப்பரப்புகளும்,கடல்களையும் இத்தட்டுக்களே தாங்கி நிற்கின்றன புவியியல் நிபுணர்கள் ஆய்ந்துள்ளனர்.
கடலாழத்தில் ஏற்படும் பாதிப்புகளினாலும்,கடலாழ பூகம்பத்தினாலும்,கடலை ஒட்டிய நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பத்தினாலும்,எரிமலையினாலும்,கிரகங்களின் செயல்பாடுகளினாலும்,கடலின் அடியில் ஏற்படும் பெளதிக மாற்றத்தினாலும் வருகின்றது.ஆராய்ச்சியாளர்களின் கூற்று சரியாயின் முதன் முதலில் கி.மி.365 ம் நூற்றாண்டில் ஜூலை 21ம் தேதி எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியாவில் தோன்றியுள்ளது.
சமீப நூற்றாண்டை கண்க்கிட்டு பார்த்தால் 1755 ல் போர்ச்சுகலில் லிஸ்பனில் நவம்பர் 11 லும்,1883 ஜாவா சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் தீவு.அமெரிக்காதான் முதன்முதலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது.இந்த அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை கருவிகள் வழியாக ,கருவிகள் நீரழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி செயற்கைகோளுக்கு அனுப்பி அதிலிருந்து பெறப்படும் தரைவழி தகவல்களை தன் உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்புகிறது.
என்னுடைய முந்தைய பகிர்தலில் கடவுள் யார்? கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி தேவையா இல்லையா? என சில பகுதிகள் இருந்தது.ஆனால் இப்பகிர்தல் அதற்கு எதிர்மறையான எண்ண ஓட்டத்தை மனதில் ஏற்படுத்தியது.கடவுள் கடவுள்னு சொல்றோமே அப்படினா அவர் ஏன் இப்படிப்பட்ட பேரலைகளை தடுத்திருக்க கூடாது?எவ்வளவு உயிர் சேதம்?எத்துணை சிறு குழந்தைகள்!ஒரு வேளை இதை விட ஒரு பேரழிவை தடுப்பதற்காக சுனாமி வந்ததாகக்கொண்டாலும்.சுனாமியால் இறந்த ஆத்மாக்களுக்கு பதில்???
சுனாமியில் இறந்த ஆத்மாக்களுக்கு என்னுடைய சமர்ப்பணம்.
அன்புள்ள திரு.அற்புதராஜ் ஐயா அவர்களுக்கு நான் தங்களிடம் ஏழாம் வகுப்பு பயின்றேன்.தங்களுடைய அறிவியல் பாட வகுப்பில் ஒரு முறை தாங்கள் ஒரு 1/2 குயர் நோட்டு வரைபடத்திற்காக போடச்சொன்னீர்கள்.ஆனால் நான் ஒரு குயர் நோட்டு போட்டு அன்றைக்கு இரவு முழுதும் கண் விழித்து வரைந்து அடுத்த நாள் தங்களிடம் நீட்ட நீங்களோ என் முகத்தில் விட்டெறிந்தீர்கள்.அப்புறம் சில பல உதைகள்.ஏன் என்று தெரியவில்லை.ஓரு வேளை எனது தந்தையும் அதே பள்ளியில் வேலை பார்த்ததாலோ என்னவோ உங்க அப்பா இருக்குறாருங்குற திமிரானு கேட்டு அடிச்சிங்க.இறுத்தேர்வு முடியும் வரை என்னிடம் பாடம் சம்மந்தமாக எந்த கேள்விகளையும் கேட்கவில்லை.காலப்போக்கில் நான் ஒவ்வொரு வகுப்பாக மாறும்போதும் எப்பொழுது உங்களை பார்த்தாலும் வணக்கம் செலுத்துவேன்.ஆனால் தாங்கள் ஒரு சிறு புன்னகையை கூட விட்டு சென்றதில்லை.இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்களை தெப்பக்குள வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது சந்திக்க நேர்தது."சரி இன்னைக்காவது சார் சிரிப்பாரு"என்ற என் அர்ப்ப ஆசையயும் பொய்யாக்கிவிட்டு சென்றீர்கள் என் வணக்கத்திற்கு பின்.
நம்ம கேமராவிலோ அல்லது செல்போனிலோ எடுக்கும் புகைப்படங்களை இணையத்திலிருந்து மற்றவருக்கு மின்னஞ்சல் அனுப்பும்பொழுது அதன் அளவை குறைப்பதற்காக பல வசதிகளுடன் இணையத்தில் உள்ள ஒரு சாப்ட்வேரை பற்றிய பகிர்தல் இது. இதற்கு Picture Resizeர்னு ஒரு சாப்ட்வேர் இணையத்துல இலவசமா கிடைக்குது.அப்படி என்ன விசேஷம் இதுல இருக்குனு பார்த்தா ,உதாரணத்துக்கு ஒரு file "JPEG" format ல இருக்குன்னா அதனை "GIF" format ற்கோ அல்லது "BMP" format க்கோ எளிதாக மாற்ற முடியும்.அந்த மாதிரி மற்றம் செய்யப்பட்ட படத்தை வேறொரு புதிய folder ல Save பண்ண முடியும்.ஒன்றுக்கு மேற்பட்ட படங்களையும் ஒரே நேரத்துல மாற்ற முடியும்.டிஜிட்டல் போட்டோகிராபர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளது. இதனை http://bluefive.pair.com/pixresizer.htm மூலம் பெறலாம்.
இந்த கேள்வி எல்லாருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான்.கொஞ்சம் ஆழமா சிந்தித்து பார்த்தால் இந்த கேள்விக்கான விடை ஒரு கேள்விக்குறியாவேதான் இருக்கும்.சமீபத்துல ஒரு தனியார் தொலைகாட்சியில இதை பற்றின விவாதம் நடந்த பொழுது என் மனதில் ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிப்பு. இரு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை எடுத்துக்கொள்வோம்,ஒருவன் தமிழ் வழிக்கல்வி,மற்றொருவன் ஆங்கிலவழிக்கல்வி,கல்வி ங்குறது எதுக்கு?பாட புத்தகம் குறது எதுக்கு?அவனுடைய அறிவ பெருக்க,நாலு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்க,விஞ்ஞானத்த பத்தி தெரிய.........இப்படி அ அ அ அ அ அ னு சொல்லிட்டே போகலாம்.கொஞ்சம் நடைமுறைக்கு வந்து பார்போம்.தமிழ் வழி பயின்றவன் சுட்டெலி(Mouse),விசை பலகை(Keyboard),வட்டம்,செவ்வகம்,முக்கோணம்,இருசமபக்க முக்கோணம்,உருளை,வகைக்கெழு(Differenciate),கோடிட்ட இடங்களை நிரப்புக( Fill in the blanks).பொருத்துக(Match the following).இதுவே இப்படினா அறிவியல் பாடத்த எடுத்துகிட்டா எவ்வளவு வரையறைகள்.சூத்திரங்கள்?சரிங்க இதெல்லாம் படிச்சுட்டு பொதுத்தேர்வுலயும் 1000 க்கு மேல வாங்கிட்டான்.கல்லூரிக்குள்ள கால எடுத்து வைக்கிறான்.ஒரு துறை ஆசிரியர் இந்த மாணவன "Tell me the Newtons third law?"னு கேக்குறாருனு வைங்க.அவன் எந்திரிச்சு"ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" ங்குறான்.அத்தன பேர் மத்தியிலும் அவனோட நிலைமைய கொஞ்சம் யோசிச்சுபாருங்க.அவனே ஒரு பொறியியல் கல்லூரிக்கோ,மருத்துவ கல்லூரிக்கோ போகும்போது அவனோட நிலைம இன்னும் மோசமாதான் இருக்கும்.இதே மாதிரியான சம்பவம் ஒரு ஊர்ல நடந்து ஒரு தமிழ் வழி பயின்றவனுடைய "உயிரை"எடுத்துருக்குனா அப்ப அந்த கல்வியினுடைய நோக்கம் என்ன? அந்த மாணவன் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்? அப்படினா தமிழ் வழி பயின்றவர்கள் எல்லாம் வெற்றி பெறலயா?அவன் ஒரு கோழையா?இதெல்லாம் வேண்டாம்.கல்வி ஒருவன் வாழ்வதற்கே தவிர வீழ்வதற்கு அல்ல!
மற்ற நாட்டுல எல்லாம் அவன் கணிதத்தையோ,விஞ்ஞானத்தினையோ அவர்களுடைய தாய் மொழியிலயே படிக்கிறாங்க.ஆனா இங்க நடக்குறது என்ன? இந்த மாதிரி தற்கொலை பண்ணிக்கிறவங்களும்,அதற்கு முயற்சி எடுக்குறவங்களும் இந்த நாட்டுல எவ்வளவோ பேர் இருக்காங்க.பாடத்திட்டம் எல்லாம் ஒன்னுதான்னா ஏன் ரெண்டு வழிக்கல்வி? ஆங்கில வழிக்கல்விக்கு இருக்குற முன்னேற்றப்பாதை ஏன் தமிழ் வழிக்கு இல்ல?ஏன் இந்த அரசாங்கம் தமிழ் வழி படிப்பிற்கான முற்போக்கு திட்டம் எதயும் அமுல்படுத்தல?M.A Tamil ல் படித்த ஒருவன் 50000 சம்பளம் வாங்க முடியுமா?முடியும்னா அதற்கான புதிய கல்வி அமைப்பையும்,கல்வி திட்டத்தையும்,வேலை வாய்ப்பையும் இந்த அரசு தருமா?
தீர்வு: இந்த காலத்துல எதுவும் நிறைவேறாது.தமிழ் தமிழ்னு முழக்கமிடும் எத்தனை தலைவர்களின் வாரிசுகள் English Convent ல படிக்கிறாங்க.இந்த மாதிரியான விவாதங்களை தொலைக்காட்சியிலும் மற்ற ஊடகங்களிலும் அலசி அலசி அவங்களோட Rating க உயர்த்திக்கிறாங்க.அவ்வளவு ஏன் ஒருத்தர் படத்தையே எடுத்து பாத்துட்டாரு.ஓடலயே?இதுக்கு என்ன சொல்றது? இந்த Blog அ முடித்தவுடனே எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு,அதுல"What were u doing Rueban?Why you are wasting your timings with the funny things?"எங்க மேனேஜர் ஆங்கிலத்துல.அட ஆண்டவா!!!!!!!!!!
சில சமயம் நம்ம இணையத்துல இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யப்படும் சாப்ட்வேர்களில் சிலவற்றை எளிதாக அழிக்க முடியாது.சாதாரணமாக "control panel" ல"add and remove programs" போய் அழிப்போம் இல்லையா?அப்படியும் அழிக்க முடியாத சில சாப்ட்வேர்களை ஒரு சில "Third Party Softwares" மூலமாதான் அழிக்க முடியும்.ஏன் அத அழிக்க முடியலனா NTFS file system ல அதற்கு அனுமதி இல்லை. Administrator இல்லனா அது தொடர்பான group ல login ல இருந்துதான் அத செய்ய முடியும். இப்படி செய்தும் நீக்க முடியலனா unlocker போன்ற சாப்ட்வேர்கள் மூலமா இந்த சிக்கல சரி செய்யலாம்.200kb அளவு கொண்ட இந்த சாப்ட்வேரை"http://ccollomb.free.fr/unlocker/" என்ற இணையதளத்துல இருந்து பெறலாம்.டவுன்லோட் செய்து இன்ஸ்டாலுக்கு பின் குறிப்பிட்ட folder ஐ தேர்வு செய்து Right click செய்து எளிதாக நீக்கலாம்.