
எங்க வீட்டு அருகே சின்ன பிள்ளை யா இருக்கும்போதே இருக்குற நண்பர்களை பத்தி சொல்லவே இல்ல பாருங்க."கார்த்தி","முத்துகுமார்".இவங்கள பத்தி சொல்லனும்.கார்த்தி நான் எல்லாம் அப்பைல இருந்தே ஒண்ணாதான் விளையாடுவோம்.அப்ப எனக்கு முத்துவ தெரியாது.இனிமேதான் கூத்தே இருக்கு.ஒரே கல்லூரிலதான் படிச்சோம்.அப்பதான் முத்துவ அறிமுகபடுத்தி வச்சான் கார்த்தி.அப்புறம் நாங்க மூணு பேரும் தான் படத்துக்கு போவோம்.கால ஓட்டத்துல கார்த்திய விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் எல்லா இடத்துக்கும் சுத்த ஆரம்பிச்சுட்டோம்.இப்ப வரைக்கும் நாங்க மூணு பேரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.மலைக்கோட்டைக்கு வாய் இருந்தா கூட அழுவும்.அந்த அளவுக்கு அங்க போய்ருக்கோம்.
கல்லூரில இருக்குற நண்பர்கள் பத்தி சொல்லனும்னா நிறைய பேர் இருக்காங்களே? எல்லா துறையிலயும் ஆண்,பெண் நண்பர்கள் இருந்தாங்க. நான் ஏன் அப்படி சொல்றேன்னா ஒரு சிலர் தான் இப்ப வரைக்கும் இருக்காங்க. நெருக்கமான தோழனாக ரூபஸ் இருக்குறான்.செந்தமிழ் இன்னொரு தோழியா இருக்குறா.அப்புறம் கலைஞர்,தியாகு,ராவ்,விஜி,கார்த்தி,லால்குடி கார்த்தி,பிரவின்.மற்ற துறைல ராஜா,மாம்ஸ்,கேத்தன்.......இன்னும் நிறைய பேர் இருக்காங்க.இதுல ரூபஸ் இப்ப திருவனந்தபுரத்துல ஒரு தனியார் நிறுவனுத்துல பொறியாளரா இருக்கான்,செந்து சென்னைல ஒரு கல்லூரில விரிவுரையாளரா இருக்கா,முத்துகுமார் சென்னைல ஒரு பன்னாட்டு நிறுவனத்துல இருக்கான்.எங்களுடைய நட்பு அனைவரும் உயிருடன் இருக்கும் வரை தொடரும்.
என்னடா நட்ப பத்தியே சொல்லிட்டுருக்கானே காதல பத்தி சொல்லவே இல்லனு நீங்க கேக்குறது புரியுது.இவ்வளவு ஆழமான அருமையான நண்பர்களை பற்றியும் , நட்ப பற்றியும் நினைக்கிறப்ப கிடைக்கின்ற ஆனந்தம் காதல பத்தி எழுதினா கிடைக்காதுனு எனக்கு தோனுது.அதனால தலைப்ப மாத்தாம அதனை பற்றிய பகிர்தலை விடுப்போம்.வரட்டுமா????
3 comments:
ஏய், அஞ்சாவதுல ஒரு பொண்ண பத்தி சொல்லுவியே.. அதுதான் காதலா?
ரூ.........பன்..,, சான்ஸே இல்ல. உங்க எழுத்து நடை என்னென்னவோ பண்ணுதே...!!!
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே....!!!
கலக்கலைத் தொடருங்கள்.
-த.பிரபு குமரன்
என்னடா ... நாம அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட்ல எவ்வளோ பேசினோம்... அதை எல்லாம் விட்டியேடா.. இருந்தாலும் நன்பா நல்லா இருக்கு
Post a Comment