
இப்ப நாம பார்க்குற மாதிரி சுவர் ஒரே நேரத்துல கட்டப்படல.வெவ்வேறான கால கட்டத்துலயும்,சூழ்நிலையிலயும்தான் கட்டப்பட்டது.பழைய கின் வம்சம்,மிங் வம்சம்னு நிறைய இருக்கு,அதுல கடைசியா மிங் வம்சத்துலதான் இதனோட கட்டமைப்பு இப்ப நாம பார்க்குற வடிவமைப்புல இருக்கு.இந்த கட்டமைப்பு நடந்த வேளைல நிறைய ஊழியர்கள் எதிரிகளின் தாக்குதலால் தங்களோட உயிர விட்ருக்காங்க,அதனால இது உலகின் "அதி நீளமான மயானம்"னு அழைக்கப்படுது.
இதோட சிறப்பு என்னனா?1987 ல யுனஸ்கோ வால "உலகின் மிக சிறந்த பாரம்பரியங்களில் ஒன்றாக "அறிவிப்பு கொடுத்தத சொல்லலாம்.சந்திரனில் இருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு இது.உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக இப்ப இருக்கு.
கொசுறு:நம்ம பாட புத்தகத்துல எல்லாம் நிலாவுல இருந்து பாத்தா பெரிய சுவர் அப்படியே தெரியும் பாரு !அப்படி சொல்வோம்ல.அதுக்கு ஆப்பு வைக்குறதுக்காக பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி இப்ப சீனாவுல எல்லா பாட புத்தகத்துல இருந்தும் இத பத்தின செய்திய எடுத்துட்டாங்க.
2 comments:
நல்ல தகவல். ஆமா நிலாவுல வடை சுடுற பாட்டி உனக்கு தெரிஞ்சவங்களா???
நிலாவுல இருந்து பாத்தா தெரியாது.. அங்க இருந்து பாத்தா பூமி ஒரு நீல வண்ண பந்து மாதிரி தான் தெரியும்.. வானத்துல ஒரு குறிபிட்ட தொலவுலேர்ந்து பார்த்தா ஒரு பெரியா பாம்பு மாதிரி சீனப் பெருஞ்சுவர் தெரியும் (அதை தான் மாத்தி நிலாவுல இருந்துன்னு சொல்லிடாங்க).. சீன பெருஞ்சுவர் கட்டும் போது செத்தவங்களை அந்த சுவரோட சுவரா புதைச்சிட்டாங்க.. இதுனால தான் அது 'நீள மயானம்' சொல்வாங்க.. அருமையான பதிவு ரூபன்
Post a Comment