Tuesday, May 20, 2008

கடவுள் யார்?


இந்த கேள்வியானது மனிதனாக பிறந்த ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வாழ்க்கைல ஒரு நிமிஷத்துலயாவது யோசிச்சிருப்பான்.இந்த உலகம் எப்படி வந்தது?மனிதர்கள் எப்படி வந்தாங்க?அவங்களுக்குள்ள ஆசைகள்,இன்பங்கள்,துன்பங்கள்,வேதனைகள் எப்படி வருகின்றன?யார் இதெல்லாம் உருவாக்கினது?கடவுள்னு ஒருத்தரே இல்லனா எப்படி கோயில்களும்,ஆலயங்களும்,மசூதிகளும்,மதங்களும் எப்படி வந்தது?மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு கொலைகளும்,போராட்டங்களும் நடக்குது?இப்படி கேள்விகள் கேட்டுட்டே போகலாம்.

இதற்கான விடைய ஒரு சின்ன கதையின் மூலம் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்(சின்ன வகுப்புல மறைக்கல்வி ஆசிரியர் சொன்னது).கதையின் நாயகன் நாம மேலே சொன்ன மாதிரி ரொம்ப ஆராய்ச்சி பண்ணுவார்.கடவுள்னா யாரு?நம்ம முன்னோர்கள் யார்?ஆதாம்,ஏவாள்னா யாரு அப்படினு ஒரு கடற்கரை ஓரமா உட்கார்ந்து யோசிச்சுட்டே இருக்காரு.அந்த சமயத்துல ஒரு பத்து அடி தூரத்துல ஒரு சின்ன பையன் கடற்கரை மண்ணுல ஒரு சின்ன குழிய தோண்டி அதுல கடல் தண்ணிய கையில் எடுத்துட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா நிரப்பிட்டு இருந்தான்.ரொம்ப நேரமா இது மாதிரி பண்ணிட்டுருந்ததால அந்த மனிதன் ,சிறுவனிடம் ,ஏன் இப்படி நிரப்புரனு கேக்குறார்.அதுக்கு அந்த பையன் ,இங்க இருக்குற எல்லா தண்ணியயும் இந்த குழிழ நிரப்ப போரேனு சொன்னான்.உடனே மனிதன் சிரிச்சுக்கிடே ,அது எப்படி தம்பி முடியும்? கடல் எவ்வளவு பெரிசு? அத எப்படி உன்னால இந்த சின்ன குழிக்குள்ள நிரப்ப முடியும்னு கேட்டார்.அதுக்கு அந்த பையன் சிரிச்சுட்டே "நீங்க உங்க மனசுல ஓடிட்டிருக்கிற வினாவுக்கு விடை தெரியரதுக்குள்ள நான் கடல் தண்ணிய குழிக்குள்ள நிரப்பிடுவேன்"னு சொன்னான்.அப்பதான் நம்ம நாயகனுக்கு புரிய ஆரம்பித்தது.

முடிவு: கடவுள் பற்றிய ஆராய்ச்சி அர்த்தமற்றது.நம்ப வேண்டும் இருக்கார்னு.






3 comments:

சிவசுப்பிரமணியன் said...

மிகவும் அருமையான விளக்கம் நன்பா... ஆனாலும் தேடல் நிற்காது

ரூபஸ் said...

எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு புலால்.

sentamizh said...

நண்பா, உன்னுடைய கதையெல்லாம் சரி தான்,ரொம்ப கதை புத்தகம் படிக்கிர போல...............

சரி ,
நன்றாக இருக்கு பா...........