Wednesday, April 23, 2008

கேள்விக்குறிகள் ஏராளம்:

எல்லாத்துக்கும் இருக்குற ஒரு கையளவு இதயத்த பத்தியும் ,அதுக்குள்ள தினந்தொறும் நடந்துட்டுருக்கிற போராட்டங்கள பத்தியுமான பகிர்தல் இது.
புதிதாய் பிறந்த குழந்தைக்கு : ஏன் எல்லாம் என்னைய பாத்து சிரிக்கிறாங்க?
பள்ளி வயது சிறுவனுக்கு : சின்ன குழந்தையாவே இருந்திருக்கலாம்!
கல்லூரி செல்லும் மாணவனுக்கு: இந்த வருடமாவது தேறுவோமா?
வேலை தேடுபவனுக்கு : இன்னைக்காவது வேலை கிடைக்குமா?
கணவனுக்கு : மனைவி இன்னைக்காவது அன்பா பேச மாட்டாளா?
மனைவிக்கு : ஒரு நாளாவது என் பேச்சை கேட்க மாட்டீங்களா?
மாமியாருக்கு : பையன் பொண்டாட்டி பேச்ச கேட்ருவானோ?
மருமகளுக்கு : என்னைக்கு என்னைய கொளுத்த போறாங்களோ?
வயதானவர்களுக்கு : பிடித்தம் இல்லாம பென்ஷன் இந்த மாதமாவது கிடைக்குமா?
கடைசியா ,
கடவுளுக்கு : அய்யோ! ஏன்டா இந்த மனித இனத்த படைச்சோம்?
ஒவ்வொருத்தருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை : அவரவரின் "மனசாட்சி".

1 comments:

ரூபஸ் said...

பராவாயில்லையே நீ கூட நிறைய யோசிக்கிற...

ரூபன் மனதில்: இன்னைக்கு யார்கிட்ட ஒரு ரூபாய் போன்ல பேசலாம்..???